சுமித்ரா, என் காதலி!! முதல் பகுதியின் தொடர்ச்சி.
கேரளாவில் கோழிக்கோடு பக்கத்தில் ஒரு கிராமம், சுமியின் சொந்த ஊர். அங்கு இருந்த நாயர் கடையில் டீ சாப்பிட்டுவிட்டு பின் அந்த விலாசத்தின் வழியைக் கேட்டான். "மோனெ ஈ ரோட்டில போயி அவட ரைட்டில திருச்சு போயாலு நீ விசாரிச்ச இடம் வரும்" என்றார்.
வளர Thanks சேட்டானு சொல்லீவிட்டு. அந்த இடத்திற்கு விரைந்தான். சரியாக வீட்டைக் கண்டுவிட்டான். வீடு உள்ளிருந்து பூட்டியிருந்தது. கதவைத் தட்டினான். உள்ளிருந்து ஒரு குறள் "யாரானு". சந்தோஷ் "யான் சந்தோஷாம், சுமித்ரா கூட்டுக்காரன்"னு சொன்னான் (சுமியின் நட்பு கிடைத்தவுடன் பக்கத்து வீட்டு ஜோஸ் மூலம் சிறிது மலையாளம் கற்றுக் கொண்டான் சந்தோஷ்). உடனே கதவு திறந்தது. "நீங்களு ஆரானு, சுமி இவட இல்லை. அவங்களு வேறு இடத்து போயி. ஈ வீட்ட யங்களு மேடிச்சதாம்" என்று வீட்டிலிருந்து ஒருவர் வெளியே வந்து கேட்டார்.
"யான் பறஞ்சுட்டில்லே, யானும் சுமியும் சென்னைல ஒரே கம்பெனில பணி புரிஞ்சு. சுமி அச்சன் சுகமில்லாம இருந்து, உடனே சுமி இவ்வட வந்து. பக்ஷேல் திருச்சு வந்துட்டில்ல" என்றான் சந்தோஷ்.
"ஓ!! அது சரி நிங்களுக்கு ஒரு விஷயமும் அறியாதோ!! சுமி அச்சன் மரிச்சுப் போயி. பின்ன கடங்காரங்க தொல்லை தாங்காம சுமியும் சுமி அம்மையும் ஈ வீடு, மற்ற சொத்து எல்லாத்தையும் விற்றுவிட்டு வேறு இடத்துப் போயி" என்றார் அப்பெரியவர்.
"சுமி address அறியுமோ" என்றான் சந்தோஷ்.
"ஏய் அறிந்திட்டில்ல மோனே" என்றார் அவர்.
போக்ரானில் செய்த அணுகுண்டுச் சோதனையை தன் இதயத்தில் யாரோ செய்தது போன்று இருந்தது அவனுக்கு. பின்பு அங்கு தனக்குத் தெரிந்த எல்லா இடங்களிலும் தேடிவிட்டு, சுமி கிடைக்காத்தால் சென்னைக்கு பெருந்துயருடன் வந்து சேர்ந்தான்.
பின்பு சென்னையில் சிறிது காலம் வேலைப் பழுவில் சற்றே சுமியை மறந்து இருந்தான். வீட்டில் பெண் பார்த்தார்கள். அவன் மனதில் சுமி இருந்ததால் எல்லா வரன்களையும் தட்டிக் கழித்தான்.
ஒரு சமயம் அவனது கம்பெனியில் ஆன்சைட் ஆப்பர் சந்தோஷுக்கும் அவன் நண்பன் சுரேஷுக்கும் வந்தது. முதலில் அதை மறுத்தான் சந்தோஷ். தன் காதல் விஷயம் அனைத்தும் அறிந்த சுரேஷின் தூண்டுதலால் பின்பு ஏற்றுக் கொண்டான்.
தூபாய்க்கு சந்தோஷும் சுரேஷும் வந்து சேர்ந்தார்கள். ஒரு மாதம் வேலையில் ஒன்றிவிட்டார்கள். முதல் மாத சம்பளம் வந்தது, சுரேஷ் "டேய் மச்சி நான் உனக்கு பார்ட்டி தரேன் டா" என்றான். சுமியை பிரிந்த சோகத்தில் இருந்த சந்தோஷ் வெகு நாட்களாக பாருக்கு செல்லவில்லை, எனவே இதையும் மறுத்தான். ஆனால் சுரேஷ் "டேய் எத்தனை நாள் அவளையே நனச்சுக்கிட்டு இருப்ப, வாடா இது உனக்கு கொஞ்சம் ஆருதலாய் இருக்கும்" என்றான்.
சந்தோஷ் "ஓக்கே டா உனக்காக வரேன், ஆனா அங்கு மூடு இருந்தால் தான் அடிப்பேன், Please don't compel me!" என்றான். "சரி ஓக்கேடா I'll not compel you, don't worry!" என்றான் சுரேஷ். அவர்கள் ஒரு டான்சிங் பார் சௌத் இந்தியன் அவுட்லெட் சென்றார்கள்.
சுரேஷ் பீர் அடிக்க துவங்கினான், ஒரு பின்ட், இரண்டு பின்ட், இப்படிப் போய்க் கொண்டே இருந்தது. சந்தோஷ் ஒரு பின்ட்டே அவனுக்குள் செல்லாமல் இருந்தது. அங்கு அனைவரும் குத்துப் பாட்டிற்கு ஆடிக் கொண்டிருந்தனர். தீடீரென லைட்ஸ் ஆஃப் ஆனது, "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்........ மார்கழித் திங்களள்ளவா, மதி கொஞ்சும் நாள் அல்லவா!!.." பாடல் ஒலித்தது, ஆடியது சுமி, முதலில் லைட்டிங்ஸ் இருந்ததால் அடையாளம் தெரியவில்லை, பின்பு அவளை கண்டு கொண்ட சந்தோஷ் "சுனாமியில் சிக்கியும் உயிர் தப்பியவர்" போன்று மிகுந்த சந்தோஷமடைந்தான்.
அவன் ஒரு சிறிய டிசு பேப்பரில் "Hai Sumi!! This is Santhosh here. Do u remember me? Please call me after ur programme is over. My number is 0505566778." என்று எழுதி பார் மெனஜரிடம் கொடுத்து அவளிடம் கொடுக்கச் சொன்னான். அதைப் படித்தவுடன் சுமிக்கு தலை கால் புரியவில்லை. கூட்டத்தில் தேடினாள் ஆனால் சந்தோஷ் தன்னை மறைத்துக் கொண்டான். சுமிக்கு ஒவ்வொறு நிமிடமும் ஒரு யுகம் போல சென்றது.
எல்லாம் 3 மணிக்கு முடிந்தது. 3:05 மணிக்கு சந்தோஷுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது. அவன் சிறிது விளையாட நினைத்தான். எனவே திருப்பி கூப்பிடவில்லை. சில நேரம் கழித்து சுமி சிறிதே பாலன்ஸ் இருந்தாலும் கால் செய்தாள், அதை சந்தோஷ் கட் செய்தான். பின்பு சிறிது நேரம் சென்று சந்தோஷ் கால் செய்தான். ஓவென்று ஒரே அழுகை. நடந்தது அனைத்தையும் கூறினாள். சந்தோஷ் "முதலிலேயே என்னை அனுகினால் எந்த பிரச்சனையும் வந்திருக்காது, சரி Past is Past. Let us think about the future. I'll talk to the Bar Manager and get you back to India." என்றான். பின்பு "டேய் சுமி ஐ லவ் யூ டா!! வில்யூ மெரி மீ?" என்று தன் காதலை பட்டென்று உடைத்துவிட்டான். சுமி "ஐ டூ." என்றாள்.
சுமியை அங்கிருந்து விடுவித்து, இந்தியா கூட்டிச் சென்று தன் பொற்றொர் சம்மதமும், சுமி அம்மாவின் சம்மதமும் பெற்று திருமணம் முடித்து, முடித்த கையோடு துபாய்க்கு Family Visa எடுத்து கூட்டிவந்து விட்டான்.
முக்கிய அறிவிப்பு:
"பீர், மது அடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் தீங்கானது!!"
Saturday, October 27, 2007
சுமித்ரா, என் காதலி!!
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 10/27/2007 12:03:00 PM 0 comments
Labels: சிறுகதை
Friday, October 26, 2007
சுமித்ரா, என் காதலி!!
சுமித்ரா, ஒரு மலையாளப் பெண். நடுத்தர குடும்பம். அவளுக்கு சிறிய வயதிலிருந்தே நாட்டியத்தின் மீது தீராத ஆசை. மோகினி ஆட்டம், கதகலி ஆட்டம் போன்ற கேரளத்து நடனக்கலைகளை கற்று வந்தாள். அவளது தந்தைக்கு ஒரே பெண்ணாதலால் மிகுந்த பாசத்துடன் வளர்த்தார். அவளுக்கு பரத நாட்டியத்தின் மீது எப்போதுமே ஒரு கண். குடும்ப நிலை காரணமாக கற்க முடியாமல் போனது. நேரம் கிடைக்கும் போது பத்மா சுப்ரமணியம் அவர்களின் நாட்டியத்தை தனது தொலைக்காட்சியில் கண்டு அதைப்போல ஆடிப் பழகுவாள். கேரளத்தில் கோழிக் கோட்டில் ஒரு கல்லூரியில் பி.காம். படித்து முடித்தாள்.
மறுநாள் அலுவலகத்தில் தனது அலுவலக மின்னஞ்சல் (Microsoft Outlook) மூலம் அவளது பெயரை வைத்து அவளது மின்னஞ்சல் விலாசத்தைத் தெரிந்து கொண்டு, பின் அவளுக்கு ஒரு மேய்ல் அனுப்பினான்.
"நேற்று உங்கள் நடனம் மிக அருமை. நான் அங்கு கூச்சலிட்டு தகராறு செய்ததற்கு மிகவும் வருந்துகிறேன். ஒரு நல்ல கலைஞியை அவமதித்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்" என்று.
அதைக் கண்ட சுமித்ரா, "பரவாயில்லை நீங்கள் வேண்டுமென்று செய்யவில்லை. அதனால் ஒன்னும் குழப்பமில்லை கேட்டோ" என்று பதில் கொடுத்தாள்.
பின்பு தினமும் ஒரு மேய்ல் சந்தோஷ் சுமித்ராக்கு அனுப்புவான். அவளும் பதில் அனுப்புவாள். ஒரு மேய்ல் இரண்டானது, இரண்டு மூன்றானது அப்படியே தொடர்ந்தது. தன் குடும்பத்தைப் பற்றி, அன்று நடந்த விஷயங்களைப் பற்றி, மற்றும் எல்லா செய்திகளையும் பரிமாறிக் கொண்டனர்.
இப்படி மின்னஞ்சல் மூலம் அவர்களது நட்பு தொடர்ந்தது. பின்பு இருவரது எண்ணங்களும், கருத்துக்களும் ஒன்று பட்டதால் நட்பு மெதுவாக காதலானது. ஆனால் இருவரும் அவரவர் காதலை தெரிவிக்கவில்லை. நேராகக் கண்டால் ஹாய்!! ஹலோ!! என்று பேசிக் கொள்வார்கள். மற்றபடி சினிமா, பார்க், டேடிங் என்று சுற்ற மாட்டார்கள். ஒரு அமைதியான தெய்வீகக் காதல்!!
ஒரு நாள் கேரளத்திலிருந்து ஒரு கால். சுமித்ராவின் அப்பா மிகவும் சீரியஸ். உடனே சுமி அடுத்த பேருந்தைப் பிடித்து கேரளா வந்து விட்டாள். இது சந்தோஷுக்குத் தெரியாது. பல மேய்ல்கள் அனுப்பியும் பதிலையே காணோம். தன் அலுவலகத்தின் Receptionist மூலம் செய்தி அறிந்த சந்தோஷ் கேரளா செல்ல முடிவு செய்தான். தன் அலுவலகத்திலிருந்து சுமியின் விலாசத்தையும் பெற்றுக் கொண்டான். தன் மனதில் சுமி மேல் இருந்த காதலையும் வெளிப்படுத்த நினைத்தான். தன் அலுவலகத்தில் 10 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு, வீட்டில் நண்பன் கல்யாணம் என்று பொய் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் கேரளாக்கு!!
(இரண்டாம் பகுதி நாளைத் தொடரும்)
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 10/26/2007 05:42:00 PM 2 comments
Labels: சிறுகதை
Friday, October 12, 2007
ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!!
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 10/12/2007 07:58:00 PM 1 comments
Thursday, October 4, 2007
இடமாற்றம்!!
கடைசியில் நானும் துபாய் வாசியாகிவிட்டேன். இங்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பு என்னைத்தேடி வந்தது எதற்கு மிஸ் பண்ண வேண்டும் என்று சேர்ந்துவிட்டேன். இப்போது பர் துபாயில் தங்கியிருக்கிறேன்.
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 10/04/2007 09:55:00 PM 3 comments
Labels: சுய சரிதை.
Sunday, September 2, 2007
பெண்களுக்குச் சம உரிமை கொடுக்கும் இந்து மதத்தை நாம் அழிக்கலாமா?
கல்வியா செல்வமா வீரமா? இது சரஸ்வதி சபதத்தில் சிவாஜி பாடியது !! உண்மையில் இது மூன்றுமே மனிதனின் இன்றியமையாத குணங்கள். இவை மூன்றிற்கும் பெண் கடவுளைப் படைத்தது நமது இந்து மதம் தான் !!!
அது மட்டுமா, ஒரு கணவன் மனைவிக்கு சம உரிமை தர வேண்டும் என்பதை உணர்த்த அக்காலத்திலேயே சிவ பெருமான் தன் உடலிலும் பாதியை தன் மனைவியான் சக்திக்கு கொடுத்தார். இப்படிப் பட்ட மகத்துவம் கொண்டது இந்து மதம்.
நன்கு விளைந்த பயிரினுள் களை எனப்படும் விசச் செடி புகுந்தது போல இத்தகைய மகத்துவம் வாய்ந்த இந்து மதத்தினுள் சாதி புகுந்து விட்டது. ஆனால் களைச் செடிக்காக பயிரை அழிப்பது நியாயமா? களை எனப்படும் சாதியைத் தான் நாம் இந்து மதத்தைவிட்டு எடுக்க வேண்டும் !!
பெரியாரின் கருத்து சாதியை ஒழிக்க வேண்டும் என்பதே தவிர இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்பது கிடையாது. பெரியாருக்கு சாதி மீது தான் கோபம் இந்து மதத்தின் மீது கிடையாது. இந்து மதம் பெரியார் கூறுவதை விட பெண்களுக்கு உயர்வான இடத்தைத் தருகிறது. இப்படிப் பட்ட இந்து மதத்தை அழிக்க வேண்டுக் என்று சொல்பவர்கள் மூடர்கள். கொசுக்களுக்காக நாம் வீட்டை எரிக்கலாமா? எனவே வாருங்கள் தோழர்களே நாம் ஒன்று கூடுவோம் சாதியை எதிர்ப்போம், இந்து மதத்தை அல்ல !!!
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 9/02/2007 10:53:00 AM 4 comments
Thursday, August 30, 2007
செளதியில் இந்திய மாணவி மாயம்
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 8/30/2007 10:14:00 AM 1 comments
Wednesday, August 15, 2007
தாயின் 'Money' கொடி பாரீர் !!
"தாயின் மணிக் (Money) கொடி பாரீர், அதை தாழ்ந்து பணிந்து உயர்ந்திட வாரீர் !! தாயின் மணிக் கொடி பாரீர் !!
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே !! ..."
என்னடா மணிக் கொடியை 'Money' கொடி என்று மாற்றிவிட்டேன் என்று நினைக்கிறீர்களா? இப்போது வாழ்க்கை இவ்வாறு தானே சென்று கொண்டிருக்கிறது. எங்கும் பணம் எதிலும் பணம். பணத்தைத் தேடி தான் வாழ்க்கையின் பாதி செல்கிறது. மீதி பாதி குடும்பம், தூக்கம் இவ்வாறு செல்கிறது. இப்படி வாழ்க்கை போகும் போது நாட்டைப் பற்றி நினைக்க யாருக்கு நேரம் இருக்கு??
ஆனால் வீடு சிறந்தாலே நாடும் சிறந்து விளங்கும் என்பதால், அனைவரும் இந்தியா 60வது சுதந்திரம் தினம் காணும் இந்த நன்னாளில் பெரிதாக ஒன்னும் நினைக்கவோ செய்யவோ வேண்டாம், தன் தாய் தந்தை, பெரியோர்கள், உற்றார் உறவினர்களை நன்றாக பார்த்து, கவனித்துக் கொண்டாலே போதும். நாம் ஒவ்வொருவரும் முதலில் தன் வீட்டைக் கவனித்து நங்கு பார்த்துக் கொண்டாலே போதும் வீடு வளர்ந்தால் நாடும் தானாகவே வளரும். ஏனென்றால் ஆயிரம் வீடு சேர்ந்தது ஒரு நகரம். 10 நகரம் ஒரு மாநிலம். 28 மாநிலம் ஒரு நாடு நம் இந்திய நாடு...
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 8/15/2007 10:33:00 AM 0 comments
Thursday, August 9, 2007
ஒற்றுமையால் உண்டு நன்மை !!
அன்பு வலைப்பதிவு நண்பர்களே!!
ஒரு பழைய படப் பாடல் உண்டு
"ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே!! வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே".
வலைப்பதிவு தமிழர்களுக்குள் தான் எத்தனை பிரிவுகள் எத்தனை பிரச்சனைகள். அதனால் எத்தனை சண்டைச் சச்சரவுகள். நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அதுவே பெரிய பூசலாக சண்டையாக மாறிவிடக்கூடாது. சண்டையிடும் இருவரும் முரன் பிடிக்காமல் யாராது ஒருவரேனும் விட்டுக்கொடுத்துப் போகலாமே?
நான் இங்கு (சௌதி அரேபியாவில்) ஒரு விஷயம் கவனித்தேன். வங்கதேசத்தாரும், மலையாளிகளும் மிகவும் ஒற்றுமையாக உள்ளனர். சரி வங்கதேசத்தார் ஒரே மதத்தால் ஒன்றுபட்டுள்ளனர் எனலாம். ஆனால் மலையாளியோ வெவ்வேறு மதமாயினும் சரி எங்கும் ஒன்றுபட்டேதான் காணப்படுகிறார்கள். அங்கு சாதி சமய வேறுபாடு எல்லாம் கிடையாது. ஆனால் தமிழர்களாகிய நம்மிடையே தான் எத்தனை வேற்றுமை?? சாதி வேற்றுமை, சமய வேற்றுமை, ஓ!! கணக்கிலடங்கா வேற்றுமைகள்!!
மற்றவருக்கு நல்ல கருத்துக்களை எழுதி அவர்களது ஒற்றுமையை வளர்க்க வேண்டிய வலைப்பதிவாளராகிய நாமே இப்படி சண்டை போடலாமா? வேலியே புல்லை மேயலாமா?? மாடுகள், புலி கதை உங்களுக்கு தெரிந்தது தானே. மாடுகள் ஒற்றுமையாய் இருந்ததாலே தப்பித்தது. பின் அவை சண்டையிட்டுத் தனித் தனியே சென்றதால் மாண்டு புலிக்கு இரையானது!!
தயவு செய்து யோசியுங்கள். இனியாவது ஒற்றுமையாய் இருங்கள். நாம் சண்டையிட்டால் நம் எதிரிக்குத்தான் கொண்டாட்டம். எனவே ஒற்றுமையாய் இருங்கள். வாருங்கள் நாம் ஒற்றுமையாய் இருந்து ஒரு நல்ல ஒற்றுமையான இந்தியாவை உருவாக்குவோம்.
பெ. செந்தில் அழகு.
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 8/09/2007 11:18:00 AM 1 comments
Monday, August 6, 2007
பெண்ணே நீ வாழ்க!!
´Õ ͨÅÂ¡É ¸¨¾.
ÌÆ󨾸û ¸¨¾ Á¡¾¢¡¢ இÕìÌõ. இÕì¸ðÎõ; ÀÊÔí¸û.
இÃñÎ «Ãº÷¸û §À¡¡¢ð¼¡÷¸û. §¾¡üÈ «Ãº¨Ãô À¡÷òÐ, §À¡¡¢ø ¦ÅüÈ¢ ¦ÀüÈ «Ãº÷ ¦º¡ýÉ¡÷, “¯í¸¨Ç ±ýÉ¡ø ¦¸¡øÄ ÓÊÔõ. ¬É¡Öõ ¿£í¸û Á¢¸ô¦À¡¢Â «È¢Å¡Ç¢. «¾É¡ø ¦¸¡øÄ¡Áø ¯í¸û «È¢¨Åô ÀÂý ÀÎò¾ Å¢ÕõÒ ¸¢§Èý. ±ÉìÌ ´§Ã ´Õ §¸ûÅ¢ìÌ Å¢¨¼ ¦¾¡¢Â §ÅñÎõ. ¿¡ý ´Õ ¦Àñ¨½ §¿º¢ì¸¢§Èý. «Å¨Ç Á½ì¸ Å¢ÕõÒ¸¢§Èý. «Å§Ç¡, ‘´Õ ¦Àñ ¯Ä¸¢§Ä§Â «¾¢¸õ Å¢ÕõÒÅÐ ±Ð?’ ±ýÀ¨¾ ¿¡ý «È¢óÐ º¡¢Â¡¸î ¦º¡ýÉ¡ø ÁðΧÁ ±ý¨É Á½ôÀ¾¡¸ ¿¢Àó¾¨É Å¢¾¢òÐÅ¢ð¼¡û. ¿¡ý º¡¢Â¡¸î ¦º¡øÄ¡Å¢ð¼¡ø ¾¢ÕÁ½õ ¿¼ì¸¡Ð. ±É§Å ±ÉìÌ «¾¨É «È¢óÐ ¦º¡øÄ, «È¢Å¡Ç¢Â¡É ¿£í¸û ¯¾Å §ÅñÎõ. ¯¾Å¢É¡ø ¯í¸¨Ç ¯Â¢Õ¼ý Å¢ðΠŢθ¢§Èý.
´Õ ÅÕ¼õ «Å¸¡ºõ §ÅñÎÁ¡É¡Öõ ¾Õ¸¢§Èý” இôÀÊî ¦º¡øÄ¢ Ţξ¨Ä ¦ºöÐÅ¢ð¼¡÷.
Å¢ÎÅ¢ì¸ôÀð¼ ÁýÉý இó¾ì §¸ûÅ¢ìÌ Å¢¨¼ ¸¡½ ÓÂýÚ ¦Àñ¸¨Çì §¸ð¼¡ý, «È¢»÷¸Ç¢¼õ ¬§Ä¡ º¢ò¾¡ý. º¡¢Â¡É Å¢¨¼ ¸¢¨¼ì¸Å¢ø¨Ä. «§¾ ºÁÂõ «ÅÛ¨¼Â ¬Õ¢÷ ¿ñÀý ÁýɨÉì ¸¡ôÀ¡üÈ, «ÅÛ측¸ Å¢¨¼ §¾Ê ¿¡¦¼íÌõ «¨Äó¾§À¡Ð ´Õ ¸¢Ã¡Áò¾¢ø ´Õ ÝÉ¢Â측¡¢ இÕôÀ¾¡¸×õ, «ÅÙìÌò ¦¾¡¢Â¡¾ Å¢„§Á இø¨Ä ±ýÚ °§Ã ¦º¡ýɾ¡Öõ «ÅÇ¢¼õ §À¡ö இó¾ì §¸ûÅ¢¨Âì §¸ð¼¡ý. ÌÆ󨾸û ¸¨¾ Á¡¾¢¡¢ §À¡¸¢È§¾¡... §À¡¸ðÎõ... §À¡¸ðÎõ...
¾¢Â¡¸ ¯½÷×¼ý “º¡¢... Á½õ ¦ºöÐ ¦¸¡û¸¢§Èý. º¡¢Â¡É À¾¢ø ¦º¡ø” ±ýÈ¡ý.
“´Õ ¦Àñ Á¢¸ Á¢¸ «¾¢¸õ Å¢ÕõÒÅÐ ´ý§È ´ý¨Èò¾¡ý. ¾ý¨Éô ÀüȢ ±øÄ¡ ÓÊ׸¨ÇÔõ «Åû ¾¡§É ±Îì¸
Å¢ÕõÒ¸¢È¡û. «ó¾î ;ó¾¢Ãò¨¾ ±¾¢÷À¡÷츢ȡû. À¢È÷ ÓÊ׸¨Çî ÍÁôÀ¨¾ «Åû ´Õ§À¡Ðõ Å¢ÕõÒž¢ø¨Ä. இó¾ ¯ñ¨Á¨Â ¯ý ÁýÉ¡¢¼õ ¦º¡øÄ¢ ±¾¢¡¢ ÁýÉ÷ ãÄõ
«ó¾ô ¦Àñ½¢¼õ ¦º¡øÄî ¦º¡ø. Á¢¸î º¡¢Â¡É இó¾ô À¾¢Ä¡ø «ó¾ô ¦Àñ ¸ñÊôÀ¡¸ ¯ý ÁýÉ¡¢ý ±¾¢¡¢ ÁýÉÕìÌ Á¡¨Ä¢ÎÅ¡û” ±ýÈ¡û.
இ¨Ç»Ûõ ÁýÉ¡¢¼õ ¦º¡øÄ, ÁýÉÕõ ±¾¢¡¢ ÁýÉ¡¢¼õ ¦º¡øÄ, ±¾¢¡¢ ÁýÉ÷ ¾¡ý Å¢ÕõÀ¢Â ¦Àñ½¢¼õ ¦º¡øÄ... ±ýÉ ¬îº÷Âõ... º¡¢Â¡É À¾¢¨Äì §¸ðÎ Á¸¢ú¢ý ¯îº¢ìÌô §À¡É «ó¾ô ¦Àñ «ô§À¡§¾ «ÅÛìÌ Á¡¨Ä¢ðÎ Á¨ÉŢ¡ɡû. ±¾¢¡¢ ÁýÉ÷, ¦º¡ýÉÀÊ §¾¡üÈ Áýɨà ŢÎÅ¢ò¾¡÷. ÁýÉ÷ ¾õ ¿ñÀ¨É Å¡úò¾¢ ¿ýÈ¢ ¦º¡ýÉ¡÷.
இô§À¡Ð «Îò¾ À¢Ãî¨É ¬ÃõÀÁ¡ÉÐ. இ¨Ç»ý ¾¡ý ¦º¡ýÉ Å¡ì¨¸ì ¸¡ôÀ¡üÈ, ¨¸Â¢ø Á¡¨ÄÔ¼ý ÝÉ¢Âì ¸¡¡¢¨Â Á½ì¸ «Åû ţΠ§¾Ê Åó¾¡ý. ±ýÉ ¬îº÷Âõ... «Åû «ÆÌ §¾Å¨¾Â¡¸ ¯Ä¸ô §ÀÃƸ¢Â¡¸ «í§¸ «Á÷ó¾¢Õó¾¡û. ¦Ã¡õÀì ÌÆó¨¾ò¾ÉÁ¡¸ì ¸¨¾ §À¡¸¢ÈÐ இø¨Ä¡... §À¡¸ðÎõ... §À¡¸ðÎõ... ¦Ã¡õÀì ÌÆó¨¾ò¾ÉÁ¡É ¸¨¾ ±ýÚ ²Á¡óÐ ¿¢ƒÁ¡¸§Å ÌÆó¨¾ Â¡¸¢Å¢¼¡¾£÷¸û. Á¢¸×õ Ó¾¢÷îº¢Â¡É ¸¨¾ இÐ. §Á§Ä ÀÊÔí¸û.
«ÆÌ §¾Å¨¾¨Âô À¡÷òÐì ÌÆôÀõ «¨¼ó¾¡ý இ¨Ç»ý. «Å§Ç¡ «Æ¸¡¸î º¢¡¢ò¾ÀÊ, “இ§¾¡ À¡÷, இÐ ±ÉìÌ ´Õ Ũ¸ º¡Àõ. ¿¡ý ¯ñ¨Á¢ø «Æ̾¡ý. ¬É¡ø ±ô§À¡Ðõ «Æ¸¡¸ இÕì¸ ÓÊ¡Ð. ´Õ ¿¡Ç¢ø «Æ¸¡¸ இÕìÌõ «Ç× «º¢í¸Á¡¸×õ ¿¡ý இÕì¸ §ÅñÊÂÐ ¾¨Ä ±ØòÐ. ±ý¨É Á½óÐ ¦¸¡ûÇ ÓýÅó¾ ¯ÉìÌ ´§Ã ´Õ ºÖ¨¸ ¾Õ¸¢§Èý. §ÅñÎÁ¡É¡ø ¯ý§É¡Î ¾É¢Â¡¸ ¿¡ý இÕìÌõ §À¡¦¾øÄ¡õ இôÀÊ «Æ¸¡¸§Å இÕô§Àý. ¦ÅǢ¢ø ÁüÈÅ÷¸û À¡÷ìÌõ §À¡¦¾øÄ¡õ «º¢í¸Á¡¸§Å இÕô§Àý. «øÄÐ ÁüÈÅ÷¸û ÓýÉ¡ø ±øÄ¡õ ¿¡ý «Æ¸¡¸§Å ¦¾¡¢§Åý. ¯ÉìÌõ ¦ÀÕ¨Á¡¸§Å இÕìÌõ. «ó¾Ãí¸ò¾¢ø ¿¡õ இÕìÌõ§À¡¦¾øÄ¡õ «º¢í¸ Á¡¸ இÕóÐ, «ó¾ì ¸½ì¨¸ò ¾£÷òРŢθ¢§Èý. ¯ÉìÌ ±Ð Å¢ÕôÀõ?” ±ýÚ ÁÚÀÊÔõ Ò¾¢÷§À¡ð¼¡û Á¡ƒ¢ ¸¢ÆÅ¢... «ó¾ «Æ¸¡É á𺺢.
´Õ Å¢¿¡Ê ¦¿üÈ¢¨Âî ÍÕ츢 §Â¡º¢ò¾ இ¨Ç»ý, “இ§¾¡ À¡÷ «ô§À¡Ð ¿£¾¡ý ¦º¡ýÉ¡ö... ´Õ ¦Àñ ¾ý¨Éô ÀüȢ ÓÊ׸¨Çò ¾¡§É ±Îì¸ §ÅñÎõ ±ýÚ «¾¢¸õ Å¢ÕõÒÅ¡û ±ýÚ... «ôÀÊ இÕì¸ ¿£ ±ý Á¨ÉÅ¢ ±ýÚ ¬¸¢È§À¡Ð ¯ý Å¢ÕôÀò¨¾ ¿¡ý Á¾¢ì¸ì ¸¼¨ÁôÀð¼Åý. ¯ý¨Éô ÀüȢ ÓÊ׸¨Ç ¿¡ý ¯ý Á£Ð ¾¢½¢ôÀÐ ±ó¾ Ũ¸Â¢Öõ ¿¢Â¡Âõ இø¨Ä. ¯ÉìÌ ±ôÀÊ Å¢ÕôÀ§Á¡ «ôÀÊ இÕ. À¢È÷ Óý «Æ¸¡¸ இÕì¸ Å¢ÕõÀ¢É¡ø «ôÀʧ இÕ. ±ý Óý «Æ¸¡¸ இÕì¸ Å¢ÕõÀ¢É¡ø «ôÀʧ இÕ. ¯ÉìÌô âý ;ó¾¢Ãõ ¯ñÎ. ¿£§Â ÓÊ× ¦ºö” ±ýÚ ¦º¡øĢŢðÎ, “¿£ ±ôÀÊ Õó¾¡Öõ ´ôÒì ¦¸¡ñ¼ÀÊ ¿¡ý ¯ý ¸½ÅÉ¡¸ Å¡ú§Åý” ±ýÚ «Æ¸¡É ÝýÂ측¡¢ ¸Øò¾¢ø Á¡¨Ä¢ð¼¡ý இ¨Ç»ý.
¸Ä¸Ä ±ýÚ º¢¡¢ò¾ «Åû, “¿£ Á¸¡ ¦¸ðÊ측Ãý. ¿£ ±ÉìÌô âý ;ó¾¢Ãõ ¦¸¡ÎòÐŢ𼾡ø ±ý Å¢ÕôÀò¨¾ Á¾¢ôÀ¾¡ø, ±ý¨Éô ÀüÈ¢ò ¾£÷Á¡É¢ì¸ ±ý¨É§Â §¸ðÎì ¦¸¡ñ¼¾¡ø, இÉ¢ ±ô§À¡Ð§Á ¿¡ý «Æ¸¡¸ இÕôÀÐ ±ýÚ ¾£÷Á¡É¢òРŢð§¼ý” ±ýÈÀÊ «ó¾ «ÆÌ §¾Å¨¾ «ÅÉÐ Á¡÷À¢ø º¡öóÐ Á¡¨Ä¡ɡû.
இôÀÊ Óʸ¢ÈÐ ¸¨¾. ÌÆó¨¾ò ¾ÉÁ¡É ¸¨¾Â¡ இÐ! ±ùÅÇ× ¬ÆÁ¡É ¦ºö¾¢ À¡Õí¸û.
±ó¾ô ¦ÀñÏõ ¾ý Å¢ÕôÀòÐìÌ Á¡È¡¸ Å¡Æ §ÅñÊ ¾Õ½í¸Ç¢ ¦ÄøÄ¡õ «º¢í¸Á¡É ÝýÂ측¡¢ ¬¸¢Å¢Î¸¢È¡û. ¾ý Å¢ÕôÀôÀÊ ¾ý ÓÊ׸¨Ç §Áü ¦¸¡ûÙõ ¾Õ½í¸Ç¢ø ±øÄ¡õ «¾¢ºÂ «ÆÌ §¾Å¨¾Â¡¸¢ Ţθ¢È¡û. இо¡ý ¦Àñ¨Á ¿¢¸úòÐõ Á¡Â¡ƒ¡Äõ. ¬É¡ø ¿ÁÐ ºã¸ «¨ÁôÒ ´Õ ¦Àñ¨½î ;ó¾¢ÃÁ¡¸ ÓʦÅÎì¸ «ÛÁ¾¢ì¸¢È¾¡?
இÇõ ÅÂÐ Ó¾ø ´Õ ¦Àñ ±ýÉ ¯¨¼ ¯ÎòÐÅÐ ±ýÀ¨¾ «õÁ¡ ¾£÷Á¡É¢ì¸¢È¡û. “இÐ ±ýÉÊ ÊÊ... Á¡¢Â¡ ¨¾Â¡ ¿¡ý ¦ºÄìð Àñ½¢É Íʾ¡÷ §À¡Î... ¯ÉìÌ ¿øÄ¡ இÕìÌõ... ¿ÁìÌ «Ð¾¡ý ¦¸ªÃÅõ...” ±ý¸¢È¡û «õÁ¡. ¾¢ÕÁ½ ž¢ø ¡¨Ã Á½ôÀÐ ±ýÀ¨¾ «ôÀ¡ ¾£÷Á¡É¢ì¸¢È¡÷. Á¸Ç¡¸ ´Õ Á¡ôÀ¢û¨Çô À¡÷òÐÅ¢ð¼¡ø, “¿¡ý இýÛõ ¯Â¢§Ã¡¼¾¡ý இÕ째ý. ±øÄ¡ò¨¾Ôõ ¯ÉìÌô À¡÷òÐô À¡÷òÐî ¦ºïº ±í¸ÙìÌ இÐ ÁðÎõ ÓÊ¡§¾¡... ±ý¨É Á£È¢ ²¾¡Ûõ ¿¼ó¾ ÐýÉ¡ ´ñÏ ¿£ ¦À¡½Á¡Â¢Î§Å; இø¨Ä ¿¡ý ¦À¡½Á¡Â¢Î§Åý, ƒ¡ì¸¢Ã¨¾” ±ýÚ ¾Á¢ú º£¡¢Âø źÉõ ¯¾¢÷òÐ ¦¿ï¨ºô À¢ÊòÐì ¦¸¡û¸¢È¡÷ «ôÀ¡ ±ý¸¢È «¨Ã츢ÆÅ÷. ´Õ ¦Àñ ±ýÉ ÀÊôÀÐ ±ýÀ¨¾ô À¡ðÊ ¾¡ò¾¡ ¯ðÀ¼ - º¢Ä ţθǢø ¿¡öìÌðÊ ¯ðÀ¼ - ÌÎõÀ§Á ¾£÷Á¡É¢ì¸¢ÈÐ. Å£ðÎ Å¡ºÄ¢ø «Åû ¿¢ü¸Ä¡Á¡ ܼ¡¾¡... À¢È§Ã¡Î §ÀºÄ¡Á¡ ܼ¡¾¡ ±ýÀ¨¾ «ÅÇÐ ´Øì¸õ Á¢Ìó¾(!) «ñ½ý ¾£÷Á¡É¢ì¸¢È¡ý. ¾¢ÕÁ½Á¡É À¢È§¸¡ ¿¢¨Ä¨Á இýÛõ §Á¡ºõ. ¯¨¼, ¯½×, ¯Èì¸õ, µö×, ¦À¡ØЧÀ¡ìÌ, Àì¾¢, ±øÄ¡§Á
Á¡Á¢Â¡÷, Á¡ÁÉ¡÷, ¸½Åý, ¿¡ò¾É¡÷, §À¡¸ô §À¡¸... Á¢¸ô ¦À¡¢Â ¦¸¡Î¨Á... «Åû ¦Àü¦ÈÎò¾ À¢û¨Ç¸û இÅ÷¸Ç¡§Ä§Â ¾£÷Á¡É¢ì¸ôÀθ¢ýÈÉ. «Ê¿¡¾ò¾¢ø ´Ä¢ì ¸¢È ¬ú ÁÉò¾¢ý ¬¨ºôÀÊ ¾ý ÓÊ׸¨Çò ¾¡§É ÅÊŨÁòÐì ¦¸¡ûÇ «ÅÙìÌ Å¡ú쨸 ÓØÅÐõ ºó¾÷ôÀ§Á «¨Áž¢ø¨Ä. «¾É¡ø¾¡ý º¢Ä ¦Àñ¸û... «ÆÌ §¾Å¨¾Â¡¸ ¬¸¡Á§Ä§Â ÝýÂ측Ãì ¸¢ÆŢ¡¸ Å¡úóÐ Óʸ¢È¡÷¸û. இôÀÊô Ò¡¢óÐ ¦¸¡ñ¼¡ø¾¡ý
இó¾ì¸¨¾Â¢ý «¸Ä ¬Æõ Ò¡¢À¼ò ¦¾¡¼íÌõ.
நன்றி மங்கையர் மலர். இது சுகி சிவம் மங்கையர் மலரில் எழுதிய தொடரிலிருந்து ஒரு பகுதி.
If any fonts problem please install the following fonts.
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 8/06/2007 04:56:00 PM 0 comments
Sunday, August 5, 2007
கணவன் மனைவியை அடிக்கலாமா?
என் நண்பன் ஒருவன் (திருமணமானவன்) நேற்று என்னிடம் தொலைப்பேசியில் கூறினான் "டேய் நேற்று, எனக்கும் என் மனைவிக்கும் பயங்கரச் சண்டை. நான் பேச பேச அவள் எதிர்த்துப் பேசினால். உடனே எனக்கு கோபம் மிகுதியாகி நான் அவளை அடித்துவிட்டேன். அவள் கோபித்துக் கொண்டு அவள் அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டாள். நான் இப்போது என்ன செய்ய?" என்றான். நான் சொன்னேன் "அடப் பாவி ஏன்டா அடிச்ச. ஆனாலும் இது ரெம்ப ஓவர்டா. போ போய் சாரி கேட்டு சமாதானம் செஞ்சு கூட்டிக்கிட்டுவா" என்றேன். அதற்கு அவன் "நான் ஏன்டா கூப்பிடனும். அவமேலதான் தப்பு அவளே உணர்ந்து வருவாள்" என்றான். நான் "டேய் முட்டாப் பயலே!! முள்ளுமேல சேல விழுந்தாலும் சேல மேல முள்ளு விழுந்தாலும் நட்டம் என்னவோ சேலைக்குத்தான்டா. போய் ஒழுங்கா மன்னிப்புக் கேட்டு, அவங்களை வீட்டுக்குக் கூட்டிவா" என்றேன். அவன் "நீ சொல்வது சரிதான்டா. நான் அப்படியே செய்கிறேன்" என்றான்.
என் நண்பன் மாதிரி எத்தனை பேர் இங்கு இருக்கிறார்கள். இந்த கணிப்பொறி உலகத்திலும் இன்னும் மனைவியை அடிக்கும் கணவன்மார்கள் இருப்பது மிகவும் வருந்தக் கூடிய விஷயம். ஒரு மனைவி என்பவள் வயதில் சிறியவாளாய் இருந்தாலும், கணவனுக்கு ஒரு தாய் போன்றவள். சும்மாவா சொன்னார்கள் பெரியோர்கள் "தாய்க்குப் பின் தாரம்" என்று? ஒரு தாயை அடிப்பவன் எவ்வளவு மூடனாக, காட்டானாக இருப்பானோ, அவனைவிட முட்டாளாக மோசமானவனாக இருப்பவன் மனைவியை அடிப்பவன்.
"செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கா லென்" என்ற வள்ளுவர் வாய் மொழிக்கிணங்க, மனைவியிடம் சினம் செல்லும். அந்த செல்லிடத்தில் சினங்காப்பவன் மிகவும் மேலானவன், என்று கூறி இத்துடன் இந்தப் பதிவை முடித்துக் கொள்கிறேன்.
மறவாமல் தங்கள் கருத்தை வெளியிடவும். நன்றி!!
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 8/05/2007 12:07:00 PM 4 comments
Monday, July 23, 2007
கோன்ஹே... பாஸ்டா கேன!!
"தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்! உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே!!"
சரி அதற்காக ஹிந்தி போன்ற வட மொழிகளை நாம் எதிர்க்கலாமா? தமிழ் மீது அளவிலாப் பற்று வைத்திருந்த பாரதியாருக்கே பல மொழிகள் தெரியுமாம். எனவே தான்
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போன்று இனிமையானது எங்கும் காணோம்"
என்றார். சிலர் ஹிந்தியை எதிர்த்தால் தான் தமிழை வளர்க்க முடியும் என்பார் தன் சுய நலத்துக்காக. ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு அவரது குழந்தைகளையோ சேர்ப்பது ஹிந்தி சொல்லித்தரப்படும் சென்டிரல் போர்டு பள்ளியில்!! அது மிகவும் தவறான சிந்தனை.
இப்போது ஆங்கிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது எப்படி வளர்கிறது? வேறு மொழிகளை வளர்ப்பதால் தான் வளர்கிறது.. ஆம் வருடா வருடம் வேறு மொழிச் சொற்களை ஆங்கிலத்தில் இணைப்பார்கள். உதாரணமாக சமஸ்கிருத வார்த்தையான "குரு" (ஆசிரியரைக் குறிப்பது) இப்போது ஆங்கில வார்த்தை.
நாமும் தமிழை வளர்க்க வேண்டுமேயானால் வேறு மொழிகளை கற்க வேண்டும். அப்போது தான் தமிழ் மொழியின் சுவையை முழுமையாக நாம் உணரமுடியும். எப்படி ஹோட்டல் உணவை உட்கொண்டால் வீட்டு உணவின் அருமை புரியுமோ அப்படி!! நாம் அவ்வாறு வேறு மொழிகளைக் கற்கவில்லையானால் அதன் விளைவு தமிழர்களாகிய நமக்கு தான். இப்போது பாருங்கள் தமிழ் நாட்டை தாண்டினாலே தமிழர்கள் ஹிந்தி தெரியாமல் பெரும் அவதிப்படுகின்றனர்.
சீனர்கள் மிகவும் கெட்டிக்காரர்களாக இருப்பினும் ஏன் அவர்களால் நமக்கு ஈடாக கணிப்பொறி மென்துறையில் பணி புரிய முடியவில்லை? காரணம் மொழி. அவர்களுக்கு ஆங்கிலம் நம்மைப் போல சரளமாக பேச முடியாது. அவர்களது நிலை நமக்கும் வரக்கூடாது. எனவே இன்றே வாருங்கள் நண்பர்களே நாம் வேறு மொழிகளையும் கற்போம்!! தமிழ் மொழியையும் வளர்ப்போம்!!
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 7/23/2007 11:33:00 AM 2 comments
காவல் துறையினர் பற்றி...
எனது முந்தைய பதிவுக்கு பதில் எழுதிய நண்பருக்கு இது பதில் கொடுப்பது போன்று அமையும்.
எனது அன்பு இசுலாமிய நண்பருக்கு, நான் மேலும் மதத்தைப் பற்றி பேசி ஒரு மதக் கலவரத்தை உண்டாக்க விரும்பவில்லை, ஏன்னெனில் எமக்கு எம்மதமும் சம்மதமே! சொன்னால் நம்ப மாட்டீர் எனக்கு இசுலாமிய மதத்தில் தான் நிறைய நண்பர்கள் உள்ளனர். மதத்தைப் பற்றி பேசி நான் அவர்கள் மனதைப் புண் படுத்த விரும்பவில்லை. நான் மதத்தைவிட மனிதர்களின் மனதை மதிப்பவன். இதற்கு முன்னர் எழுதிய மடலால் எவர் மனமாவது புண் பட்டிருந்தால் என்னை தயவு செய்து மன்னிக்கவும். சற்று சாதி சமயத்தை மறந்து வேறு திசையில் சிந்தித்துப் பார்ப்போம்.
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 7/23/2007 09:49:00 AM 2 comments
Labels: காவல் துறையினர், சமுதாயம்
Thursday, July 19, 2007
எல்லா மதத்திலும் மூட நம்பிக்கைகள் உள்ளன!!
எனது அருமை இஸ்லாமிய நண்பர் முன்பு எழுதிய வலைப்பூவை தயவு செய்து பார்க்கவும். அதன் தொடர்ச்சியாக இது அமையும்.
இப்படிப்பட்ட மூட நம்பிக்கை எந்த மதத்தில் தான் இல்லை. இஸ்லாமிய மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகள் இதோ
1, ஹஜ் யாத்திரை சென்றால் நாம் செய்த பாவங்கள் தீரும். சரி அப்படியென்றால் நாம் கொலை கற்பழிப்பு எல்லாம் செய்து விட்டு ஹஜ் யாத்திரை செல்வோம். நம் பாவம் தீர்ந்து விடும் தானே.
2, கிடா வெட்டுவது உங்கள் மதத்திலும் தானே உள்ளது. ஹஜ் யாத்திரையின் போது நீங்களும் குர்பானி தருவீர்கள் தானே!!
3, ஹஜ் யாத்திரையின் போது சாத்தான் வரும் அதை எதிர்க்க கல் எறிவார்கள். சரி சாத்தான் வந்தால் அதைக் காட்டுங்கள். அதை ஏன் நீங்கள் எதிர்கிறீர்கள் அல்லாஹ் பார்த்துக் கொள்ளமாட்டாரா?
4, உம்ரா செய்தால் புண்ணியம் கிட்டும். சரி கொலைகாரர்களை சிறையில் அடைப்பதற்கு பதில் உம்ரா செல்லச் சொல்வோம்.
5, இந்தியாவில் உள்ள தர்கா சென்று வழிபடுவது. அந்த சமாதியில் இருப்பவன் எப்போதோ இறந்து விட்டான் அவன் எப்படி உங்களுக்கு அல்லாஹ்விடம் துவா கேட்பான்!!
இவைப் போன்ற பல மூட நம்பிக்கைகள் உள்ளன.
இப்படி பல மூட நம்பிக்கைகள் உள்ள நீங்கள் (இஸ்லாமியர்கள்) இந்து மதத்தின் மூட நம்பிக்கைப் பற்றி சொல்ல எந்த தகுதியும் கிடையாது!!
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 7/19/2007 11:48:00 AM 1 comments
Labels: மதம், மூடநம்பிக்கை
Wednesday, July 11, 2007
இலங்கையின் பொருளாதாரம்.
இலங்கை ஒரு இயற்கை வளம் மிகுந்த நாடு. அங்கு விளையும் பயிர்களில் தேயிலை மற்றும் காபிக் கொட்டை மிகவும் முக்கியமானது. அங்கு தேங்காய் மற்றும் இரப்பர் மரங்களும் பயிரிடப்படுகிறது. நல்ல கணிமங்களும் மிகுந்தது. சரி நாம் விஷயத்திற்கு வருவோம். இத்தனை வளம் இருந்தும் ஏன் அங்கு வளர்ச்சி இல்லை? மக்கள் ஏன் வெளி நாட்டிற்கு சென்று கஷ்டப்படுகிறார்கள்? உலகில் அதிகமான வீட்டு வேலை செய்யும் பெண்கள் விசா (ஹவுஸ் மேய்டு) இலங்கைக்குத்தான் வழங்கப்படுகிறது. அங்கு உள்ள பெண்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேருகிறார்கள். வளைகுடா நாடுகளில் ஹவுஸ் மேய்டு விசாவில் வரும் அவர்கள் படும் பாடு சொல்லித்தீராது.
இவை அனைத்திற்கும் காரணம் அங்கு நடந்து வரும் விடுதலைப் புலியினருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் நடக்கும் யுத்தம். அது எப்போது முடியும்? ஏன் இந்தியா இதில் தலையிட மறுக்கிறது? ஒரு காலத்தில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது வங்கதேசம் பாக்கிஸ்தான் இடையே நடந்த யுத்தத்தில் தலையிட்டு அங்கு அமைதி நிலை உருவாக்கிக் கொடுத்தார். அதே போல் ஏன் இலங்கை யுத்தத்திலும் தலையிட்டு அங்கும் அமைதி நிலை உருவாக்கிக் கொடுக்கக் கூடாது?
இந்திய பிரதமர் நார்வே பிரதமரிடம் இலங்கையில் அமைதிப் பேச்சு நடத்தக் கோரிக்கை விடுத்தாராம்! ஏன் இந்தியாவால் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த இயலாதா? இந்தியாவின் மக்கட்தொகையிலும் சரி வளர்ச்சியிலும் சரி தமிழர்கள் ஒரு முக்கியப் பங்கு வகித்து வருகிறார்கள். அதே தமிழர்கள் தான் அங்கும் உள்ளனர். அத்தமிழர்களையாவது மனதில் கொண்டு இந்திய அரசு அப்பிரச்சனையில் தலையிட்டு ஒரு நல்ல சுமூகமான தீர்வு காணலாமே.
அப்பிரச்சனையில் இந்தியா தலையிட வேண்டும். இலங்கையில் வெகு விரைவில் அமைதி நிலைத் திரும்ப வேண்டும். இப்படிச் சொல்வதால் நான் எந்த ஒரு இயக்கத்தையும் சார்ந்தவன் என்று எண்ண வேண்டாம். நான் உலகத் தமிழர்களின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட ஒரு சாதாரண தமிழன் அவ்வளவுதான்..
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 7/11/2007 06:16:00 PM 6 comments
Sunday, July 8, 2007
சர்தார்ஜி ஜோக்ஸ்!
இவை அனைத்தும் நான் ஒரு இணையதளத்தில் படித்தவை.
சான்டா சிங்கு ஒரு நர்ஸை காதலிக்கிறார். ஒரு லவ் லேட்டர் எழுதுகிறார். அதில் "ஐ லவ் யூ சிஸ்டர்" என்று எழுதுகிறார்.
*******************************************
பப்பு (சான்டாவின் மகன்): ஒரு பாரம் நிரப்புகிறார் "மதர் டங்கு என்ற இடத்தில் என்ன எழுத".சான்டா: 6 1/2 முழம் என்று எழுது.
*******************************************
சர்தார் ஒரு பெண்ணை காதலிக்கிறார். அவளிடம் தனது காதலை வெளிபடுத்துகிறார். அதற்கு அவள் நான் உன்னை விட ஒரு வருடம் மூத்தவள் என்கிறாள். நோ பிராபலம் சோனியே நான் உன்னை அடுத்த வருடம் திருமணம் முடிக்கிறேன்.
*******************************************
பான்டா சிங்கு தனது தேர்வு எழுதும் போது தனது டிரௌஸரை கழட்டுவிட்டு எழுதுகிறார் ஏன்?அவை அனைத்தும் "Answer in Brief" வினாக்கள்.
*******************************************
சான்டா சிங்கு ஒரு தொடர் வண்டி ஓட்டுனராக பணியாற்றுகிறார். அப்பொழுது ஒரு விபத்து நடந்து ஒரு ஊரையே காலி செய்துவிட்டார். அவரிடம் பேட்டி. நிருபர்: எப்படி இந்த விபத்து நடந்தது? சான்டா: எதிற்கே ஒரு மாடு வந்தது.நிருபர்: அடப்பாவி மாடு வந்தால் அது மேல் வண்டியை ஏற்ற வேண்டியது தானே.சான்டா: ஆம் நான் அதைத்தான் செய்தேன். வண்டியை கண்டவுடன் மாடு ஊரை நேக்கி ஓடியது.
********************************************
ஏன் சான்டா கதவு பக்கத்தில் உட்கார்ந்து தேர்வு எழுதினார். ஏனெனில் அது நுழைவுத்தேர்வு.
********************************************
சான்டா: மன்மோகன் சிங்கு ஏன் காலையில் நடை பயிற்சி செய்யாமல் இரவு செய்கிறார்?பான்டா: ஏன் என்றால் அவர் பி.எம். ஏ.எம். இல்லை.
********************************************
ஏன் மிஸிஸ் சான்டா பெயின்ட் அடிக்கும் போது இரண்டு கோட்டுகளை போட்டுக் கொண்டார். ஏனெனில் அதில் "For best results put on two coats" என்று எழுதியிருந்தது.
********************************************
சான்டா: நான் தினமும் அலுவலகம் செல்லும் முன் என் மனைவியை முத்தமிடுவேன். நீ?பான்டா: நீ சென்றவுடன் நான் முத்தமிடுவேன்.
********************************************
சான்டா சிங்கு டில்லியிலிருந்து சண்டிகார் காரில் 6 மணி நேரத்தில் செல்லுகிறார். திரும்ப சண்டிகாரில் இருந்து டில்லி வருவதற்கு 2 நாட்களாகிறது. ஏன் என்று மனைவி கேட்கிறாள். அதற்கு சான்டா "முன்னால் போக 4 கியர்கள் உள்ளன. ஆனால் பின்னால் போக மடையன் ஒரு கியர்தான் வைத்துள்ளான்" என்றார்.
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 7/08/2007 04:29:00 PM 0 comments
Saturday, July 7, 2007
தொடர் வண்டிகளில் பெண்கள்.
சென்னையிலும் மற்றும் சென்னை புற நகரிலும் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் தொடர் வண்டிகளில் இன்றும் பெண்களுக்காக 2 அல்லது 3 பெட்டிகள் தான் கொடுக்கப்பட்டுள்ளது. பொது பெட்டிகளில் பெண்கள் ஏறினால் அவர்களின் நிலை என்னவாகும் என நான் சொல்லித் தெரிவதில்லை, ஆண்களின் சீண்டல்களுக்கும் உரசல்களுக்கும் ஆளாவார்கள் என்பது அனைவரும் தெரியும். இருந்தும் ஏன் அவர்களுக்கு மேலும் பெட்டிகளை கொடுக்காமல் இரயில்வே அவர்களை இவ்வாறு துன்புறுத்துகிறது?
நன்றி: தினமலர் ஈ - பேப்பர்.
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 7/07/2007 05:27:00 PM 0 comments
Labels: பெண்கள்
Wednesday, July 4, 2007
பெரியாரின் கூற்று.
"தமிழன்"
பெரியார் சரியாகத்தான் கூறியுள்ளார். இன்றும் பெண்களின் நிலை அவ்வாறே தான் உள்ளது. பெண்களை நாம் ஒரு கேளிக்கை பொருளாகவோ அல்லது ஒரு பிள்ளை பெறும் இயந்திரமாகவோ தான் எண்ணுகிறோம். ஒரு உயிருள்ள, உணர்வுகளுள்ள பொருளாக நினைக்க மறுக்கிறோம். இன்னமும் பேருந்துகளில் ஆண் நாய்களின் உரசல்களும் தீண்டல்களும் நீடித்து தான் வருகிறது. இது மிகவும் வேதனைக்குரியது. வெட்கத்துக்குரியது.
இந்த கணிப்பொறியுகத்திலும் பெண்ணுக்கு சம உரிமைக் கொடுக்க நாம் மறுக்கிறோம். சென்னையில் பெண்கள் சிறப்பு எலக்டிரிக் டிரேயின் விட்டபோது பொதுமக்களிடையே எத்தனை எதிர்ப்புகள் வந்தது தெரியுமா? என் நண்பன் கூட அதை எதிர்த்துப் பேசியது எனக்கு மிகவும் வருத்தமளித்தது. பெண்களின் இந்த நிலை என்று மாறுமோ அன்று தான் இந்தியா வல்லரசு நாடாகும் என்பது உறுதி.
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 7/04/2007 05:27:00 PM 0 comments
Labels: பெண்கள்
Monday, July 2, 2007
சிவாஜி - என் கண்ணோட்டம்
சிவாஜி பற்றி நிறைய விமர்சனங்களை நாம் படித்துவிட்டோம். சிலர் குறை கூறினர், வேறு சிலர் அவற்றுள் உள்ள நிறையை கூறினர். நான் நேற்றுதான் சிவாஜி, திருட்டு விசிடி மூலம் பார்த்தேன் (தயவு செய்து மன்னிக்கவும், நான் சௌதி அரேபியாவில் உள்ளேன் இங்கு திரை அரங்கு கிடையாது, எனவே திருட்டு விசிடி தான் ஒரே வழி). நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன் இருந்தும் ஏனோ நான் எதிர்ப் பார்த்த அளவுக்கு படம் இல்லை. சந்திரமுகி படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் அந்த படத்தை குறைந்தது 20 முறையாவது பார்த்து இருப்பேன். எனக்கு அன்னியன் படம் கூட பிடித்திருந்தது. ஆனால் சிவாஜி நான் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை.
என்ன காரணம் என்று நான் யோசனை செய்தேன். காரணம் புரிந்து விட்டது. சங்கர் படம் என்றாலே ஒரு எதிர்ப் பார்ப்பு இருக்கும். அதுவும் சங்கரும் சூப்பர் ஸ்டாரும் சேர்ந்து செய்ததால் நாம் அதிகம் எதிர்ப்பார்த்து விட்டோம். படம் நம் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்ய தவறிவிட்டது. ஆனால் உலக அளவில் தமிழ் படத்திற்கு பெருமை சேர்த்துவிட்டது.
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் மூலம் மெல்போர்ன் நகர் திரை அரங்கில் மிகவும் அதிக டிக்கட் விலை போன படம் சிவாஜி என்று தெரிந்து கொண்டேன். எத்தனையோ ஆங்கிலப் படங்கள் அங்கு திரையிடப்பட்டுள்ளனவாம் இருந்தும் சிவாஜி டிக்கட் விலை அவற்றை விட அதிகம் போனது என்பது பெருமைக்குரியது. மேலும் பல சாதனைகளை முறி அடித்துவிட்டது சிவாஜி என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி ஒரு சிறந்த கமர்சியல் படம்...
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 7/02/2007 01:35:00 PM 2 comments
Labels: சிவாஜி
Monday, June 18, 2007
மக்களை முன்னேற்றுவதே மதம் என்பது...
சமயம், மதம் என்பது என்ன? முந்தைய கால மனிதன் ஒரு நெறி இல்லாமல் நெறி கெட்டு தறி கெட்டு சென்று கொண்டிருந்தான். அவனை ஒரு நெறிக்குள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே மதம் என்னும் ஒரு நெறி நம் முன்னோர்களால் கொண்டுவரப்பட்டது. மதம் ஒருப் போதும் மக்கள் முன்னேற்றத்தை தடுப்பதாகாது.
பிற்காலத்தில் மன்னர்களும் அரசியல்வாதிகளும் ஏற்படுத்தியதுதான் சாதியாகும். ஒரு மதத்தை உண்மையாக பின்பற்றுபவன் ஒருக்காலும் தீய செயலை செய்ய மாட்டான். நான் இங்கு எந்த மதத்தையும் குறிப்பிட்டு கூறவில்லை. உண்மை என்னவெனில் அனைத்து மதமும் ஒன்றே. அனைத்து மதமும் ஓரே கருத்தைத் தான் சொல்லும். வெவ்வேறு மதங்கள் பிற்காலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்டது. ஒருவரிடம் சென்று "டேய் அதைச் செய்யாதே" என்றால் அதைத்தான் செய்வான். அதே ஆளிடம் சென்று "டேய் அதைச் செய்தால் நரகத்திற்கு சென்று விடுவாய்" என்றால் பயந்து கொண்டு செய்ய மாட்டான்.
நான் பெரியார் கூறியது தவறு என்று சொல்லவில்லை. அவர் சாதியின் வேரை அறுக்கவே மதம் வேண்டாம் என்றார். வெறும் சாதி இல்லை என்றால் மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே தான் அவர் சாதியின் வேரான மதமே இல்லை என்றார்.
மற்றபடி பெண்ணடிமைத்தனம், தீண்டாமை போன்றவை காலப்போக்கில் மதத்திற்குள் திணிக்கப்பட்டது. எந்த ஒரு மதமும் அவற்றை ஒருப்போதும் ஆமோதிக்காது.
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 6/18/2007 04:50:00 PM 0 comments
Sunday, June 17, 2007
தந்தையர் தினம் !!
இன்று தந்தையர் தினம். எத்தனை பேருக்கு இது தெரியும் என்று எனக்கு தெரியாது. ஆனால் காதலர் தினம் எத்தனை பேருக்கு தெரியாது என்று எனக்கு உறுதியாகத் தெரியும். சிலர் சொல்லுவார்கள் தந்தையர் தினம் மேற்கத்தியருக்குத்தான் அதை ஏன் நாம் கொண்டாட வேண்டும் என்று. அப்படிப் பார்த்தால் காதலர் தினமும் மேற்கத்தியருக்காகத்தான் அதை நாம் கொண்டாடும் போது இதையும் கொண்டாடத்தான் வேண்டும்.
தந்தை என்பவர் நமக்கு உயிர் கொடுத்தவர். மக்களுக்கும் விலங்கினத்திற்கும் உயிர் கொடுத்தவர் கடவுள் என்றால், நம் தந்தையும் நமக்கு கடவுள் தான். இப்பொழுது எத்தனை பேர் தன் தந்தையை மதிக்கிறார்கள்? "போங்கப்பா உங்களுக்கு ஒன்னும் தெரியாது!!" இதைத்தான் நாம் சொல்கிறோம். "அவர் பழைய Generation ஆள்" என்றுதான் சொல்கிறோம். அவர் நமக்காகவும் நம் குடும்பத்திலுள்ள ஏனையோருக்காகவும் எவ்வளவு பாடுபடுகிறார் என்று உணர்கிறோமா? சேரன் தனது "தவமாய் தவமிருந்து" படம் மூலம் ஒரு தந்தை படும் பாட்டை மிக அழகாகவும் அருமையாகவும் எடுத்துக் காட்டியுள்ளார். பண்டிகை நாட்களில் தனக்கு கூட புதிய ஆடை எடுக்காமல் தன் குழந்தைகளுக்கு கேட்கும் ஆடையை எடுத்துத் தருகிறாரே, அப்போதாவது அவர் நமக்காக செய்யும் தியாகத்தை நாம் உணர்கிறோமா?
"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். "
என்ற வள்ளுவர் வாக்குக்கிணங்க நாம் இனியாவது செயல்பட்டு, தன் தந்தையின் முதிய காலத்தில் அவர் மனம் நோகாமல் அவரை நன்கு கவனித்துக்கொள்வோம் என்று இந்த நன்னாளில் நாம் உறுதி எடுத்துக்கொள்வோமாக!!
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 6/17/2007 04:19:00 PM 0 comments
Labels: தந்தை
சினிமா சொல்லும் கலாச்சாரம் !!
சமீபத்தில் வெளி வந்த படங்களில் எது நல்ல படம் என்று என் நண்பனிடம் கேட்டேன். அதற்கு அவன் "மச்சி உன்னாலே உன்னாலே செம படம் மச்சி, நல்ல கதை நல்ல பாடல்கள் நல்ல நடிப்பு" என்று சொன்னான். அவன் சொன்னது என் மனதில் முள் போல குத்தியது.
அதில் ஒரு காட்சி வரும். இராசு சுந்தரம், வினை (கதாநாயகன்) மற்றும் சதா காரில் செல்வார்கள். அப்போது இராசு சுந்தரத்திற்கு தன் கைத்தொலைபேசியில் ஒரு கால் வரும். அதாவது ஒருவன் ஒரு பெண்ணை அவர்களுக்கு அனுப்பியதாகவும், அப்பெண்ணுடன் நம் கதாநாயகன் வினை "Full Night Full Tight" என்று இராசு சுந்தரம் சொல்வார். உடனே சதா கோபித்துக் கொண்டு காரைவிட்டு கீழே இறங்கி விடுவாள். நம் கதாநாயகன் சொல்வார் புரிந்து கொள் என்று. ஏதோ அவர் ஒன்றும் செய்யவில்லை, சதா தான் தவறாக நினைத்துக் கொண்டாள் என்றும் அதை அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும். இப்படி ஈனச் செயலை செய்யும் இவன் கதைக்கு நாயகனாம்?
முன்பு வந்த படங்களில் கதையின் நாயகன் ஒரு உத்தமராய் இருப்பார். ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கடைபிடிப்பார். ஆனால் இப்போது உள்ள காதாநாயகன் திருமணத்திற்கு முன்பு தகாத உறவுகளை வைத்துக் கொள்கிறார். இதை கதாநாயகி புரிந்து கொள்ள வேண்டுமாம், இது தவறில்லையாம். இதை பார்க்கும் இளைய சமூகத்தினர் என்ன செய்வார்கள் சிந்தியுங்கள்...
இப்படிப்பட்ட திரைப்படத்தை எப்படி நமது சென்சார் வெளியிடுகிறார்கள் என்று புரியவில்லை. இப்படிப்பட்ட படம் நல்ல படம் என்ற பெயரையும் பெற்றுவிடுகிறது. இதனால்தான் நம் நாட்டில் Dating மிகுந்துள்ளது. நம் கலாச்சாரம் அழிந்து கொண்டு வருகிறது.
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 6/17/2007 12:28:00 PM 0 comments
Labels: கலாச்சாரம்
Tuesday, June 12, 2007
மிஸ் யூனிவர்ஸ்!!
மிஸ் இந்தியா, மிஸ் யூனிவர்ஸ், மிஸ் வேல்டு, மிஸ் ஏசியா பசிபிக்... அப்பப்பா! ஆணின் காம பசிக்குத்தான் எத்தனை விருந்துகள்!! இவை அனைத்தும் உண்மையாகவே தேவைதானா? இவை எத்தனை ஏழை குடும்பங்களை காக்கிறது? எத்தனை பசியால் துடிப்பவர்களுக்கு உணவளிக்கிறது? இவை உண்மையாகவே தேவைதானா?
ஏன் கலாச்சாரத்திற்கு பேர்போன நம் இந்தியாவும் இதில் பங்கேற்கிறது? நம் பெண்கள் அடக்கத்திற்கும் அமைதிக்கும் பேர் போனவர்கள். இருந்தும் ஏன் அவர்கள் இதில் பங்கேற்கிறார்கள்? காரணம்... பணம்!!! வென்றுவிட்டால் கிடைப்பது கொஞ்ச நஞ்சமா? கோடிக்கணக்கிலள்ளவா கிடைக்கும்!!
சரி பணத்திற்காக நம் கலாச்சாரத்தை விற்பது நியாயம் தானா சற்று யோசியுங்கள்!!!
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 6/12/2007 06:37:00 PM 0 comments
Labels: கலாச்சாரம்
Monday, June 11, 2007
சௌதி அரேபியாவில் நான்!!
நான் எங்கள் வீட்டில் ஒரே பையன். எனக்கு நான்கு மூத்த சகோதரிகள் உள்ளனர். நான் ஒரே பிள்ளையாதலால் மிகவும் செல்லப்பிள்ளை. வீட்டில் ஒரு வேலை கூட செய்ய மாட்டேன். எல்லா வீட்டு வேலையும் சரி வெளி வேலையும் சரி என் சகோதரிகள் பார்த்துக்கொள்வார்கள். சிலர் சொல்வார்கள் உங்கள் வீட்டில் நான்கு பையன்கள் ஒரே பெண் என்று.
பின்னர் நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கணிப்பொறியியல் பயின்று நல்ல மதிப்பென் பெற்று தேர்ச்சி பெற்றுவிட்டேன் (உண்மையாகவே நல்ல மதிப்பென் தான் என்னை அப்படி பார்க்க வேண்டாம்). அப்பொழுது 911 சம்பவம் நடந்த சமயம், ஐ.டி. பீல்டு ரெம்ப சரிவடைந்து கிடந்தது. எனக்கு இந்தியாவில் நல்ல வேலை கிடைக்கவில்லை. வீட்டில் என்ன செய்வார்கள் - எனது மூத்த சகோதரியின் கணவர், அதாவது என் மூத்த மாமா சௌதி அரேபியாவில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் சொல்லி எனக்கு அங்கு வேலைக்கு விசா எடுக்கும் படி சொல்லி என்னை சௌதிக்கு அனுப்பிவிட்டார்கள்.
ஆயிரம் வண்ணக் கணவுகளுடன் நான் சௌதி அரேபியா வந்துவிட்டேன். நம்மில் பலர் வெளிநாடு என்றால் பெரிய பெரிய கட்டடங்கள், சுத்தமான சாலைகள் என்றுதான் கற்பனை காண்கிறோம், திரைப்படத்திலும் காண்கிறோம். ஆனால் இங்கு நான் கண்டது எதிர்மறை. விமானநிலையத்திலிருந்து ஊருக்குள் செல்லும் வழியில் இரண்டு புறமும் ஒரே மணல், வெறும் மணல் மேடு. நம்மூரில் பொட்டைக்காடு என்று சொல்வோமே அதைப்போல இருந்தது. சௌதியின் தலைநகரமான ரியாதில் தான் என் மாமா இருக்கிறார். நானும் அங்குதான் சென்றேன். சென்ற ஒரு ஆறு மாதங்களில் வேலைக்கிடைத்துவிட்டது. நல்ல சம்பளம்.
ஆனால் ஒரு அதிர்ச்சியான செய்தி - இங்கு பெண்கள் வேலைப் பார்க்க கூடாது, அதாவது ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் சேர்ந்து வேலை செய்யத் தடை. பெண்களுக்குத் தனி அலுவலகத்தில் வேலை ஆண்களுக்குத் தனி அலுவலகத்தில் வேலை. அதுமட்டுமல்ல பெண்கள் சாலையில் நடமாடும்போது அபயா என்று இங்கு அழைக்கப்படும் (நம்மூரில் பர்தா என்பார்கள்) துணியை இட்டு முகத்தை மூடிக்கொண்டு தான் செல்ல வேண்டும். ஐயகோ!! பிறந்ததிலிருந்தே பெண்கள் (என் அம்மா, என் சகோதரிகள், என் பாட்டி, என் சிற்றன்னைகள்) முகத்தைப் பார்த்து வளர்ந்த எனக்கு இந்த நிலைமையா!!
சரி அது போகட்டும். நான் வாரமொருமுறை வீட்டிற்கு கணிப்பொறி வெப்காமரா மூலம் வீடியோ கான்பஃரன்சிங்கு செய்வேன், அப்போது ஆசைத்தீர என் அம்மா என் சகோதரிகள் முகத்தைப் பார்த்துக்கொள்வேன்.
இங்கு பல தமிழ் உணவகங்கள் உள்ளன. நான் ஒரு நாள் ஒரு உணவகம் சென்று, சரி நம்மூர் ஆற்காடு பிரியாணி சாப்பிட்டு எத்தனை நாட்களாகிறது என்று நினைத்து ஒரு சிக்கன் பிரியாணி ஆர்டர் பண்ணினேன். உடனே ஒரு பிலேட் நிறைய பிரியாணி என்ற பெயரில் எதோ உப்பு காரம் இல்லாமல், பத்திய பிரியாணி எடுத்து வந்தான் (அதாவது இங்கு வாழும் மக்களது பாரம்பரிய உணவு கப்சா எனப்படும் ஒரு வகை பத்திய பிரியாணி. அதில் எண்ணேய் மட்டும் தான் இருக்கும். இங்கு எல்லாக் கடைகளிலும் பிரியாணி கப்சா போல தான் இருக்கும்). என்ன செய்ய ஆர்டர் பண்ணிய காரணத்தால் வேறு வழியில்லாமல் சாப்பிட்டுவிட்டு வந்தேன்.
மற்றொரு நாள் காலையில் காலை உணவுக்காக வேறொரு தமிழ் உணவகம் சென்றேன். அவ்வுணவகம் இங்குள்ள தலைச்சிறந்த உணவகங்களில் ஒன்றாகும். அங்கு சென்று தமிழர்களின் வாடிக்கையான காலை உணவான இட்லி ஆர்டர் செய்தேன். உடனே அவர்கள் இட்லி என்ற பெயரில் நான்கு சுண்ணாம்பு கற்களை கொண்டு வைத்தார்கள். தலைசிறந்த உணவகத்திலேயே இந்த கதி என்றால் சாதாரண உணவகத்தில்??
ம்ம்ம்.. என் அன்னையின் இட்லி மல்லிகைபூ போன்று மிகவும் மிருதுவாக இருக்கும். பக்கத்துக் கடை ஆற்காடு சிக்கன் பிரியாணி (சிக்கனமான பிரியாணி கூட) எவ்வளவு சுவையாக நறுமணமாக (பிரியாணி செய்தவுடன் அந்த தெருவே மணக்கும்) இருக்கும். எந்த பிறவியில் என்ன பாவம் செய்தேனோ இங்கு இப்படியெல்லாம் பணத்திற்காக கஷ்டப்பட வேண்டியுள்ளது...
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 6/11/2007 11:52:00 AM 5 comments
Labels: சுய சரிதை.
Wednesday, March 7, 2007
பெண்கள் நாட்டின் கண்கள் !!
பெண்கள் ஏன் நாட்டின் கண்கள்? ஏன் ஆண்கள் நாட்டின் கண்கள் கிடையாதா? ஒளவையார் கூறினார்
"வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும் ...."
ஏன் மக்களையோ அரசனையோ பற்றி பேசாமல் வரப்பை பற்றி கூறினார்? ஒரு பெரிய 10 மாடியோ 20 மாடியோ உள்ள கட்டடம் வலிமையாக இருக்க வேண்டுமானால் அதன் அடிதளம் வலிமையாகவும், கடினமாகவும் இட்டு இருக்க வேண்டும். அதைப் போல ஒரு நாடு வலிமை மிக்க ஒரு வல்லரசாக வேண்டுமாயின் அதன் வீடுகள் வலிமை மிக்கதாக இருக்க வேண்டும். ஒரு வீடு எவ்வாறு வலிமை மிக்கதாக இருக்கும்? அதன் அடிதளமான பெண்கள் நன்கு அறிவு பெற்று புத்திசாலிகளாக திகழும் போது!!
ஒரு வீட்டில் தந்தை எப்படி பட்டவராக இருந்தாலும் சரி தாய் சிறந்தவளாயின் வீடும் சிறந்து விளங்கும். எனவே தான் பெண்கள் நாட்டின் கண்கள். அதனால் தான் நாம் பெண்கள் தினம் கொண்டாடுகிறோம்.
செந்தில் அழகு.
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 3/07/2007 08:35:00 PM 1 comments
Monday, March 5, 2007
அசின்!!
அசையாமல் என்னை ஒரே இடத்தில் அமர்த்தினாய்!!
சிங்கம் போல் இருந்த என்னை உனக்கு சங்கம் தொடங்க வைத்தாய்!!
உன் ஒரு கண் அசைவால் என்னை ஆயுள் கைதியாக்கினாய்!!
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 3/05/2007 04:51:00 PM 2 comments
Sunday, March 4, 2007
இந்த வார சிந்தனைக்கு!!
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
அறத்துப்பால்
அதிகாரம்: புதல்வரைப் பெறுதல்
Translation : When mother hears him named 'fulfill'd of wisdom's lore,' Far greater joy she feels, than when her son she bore. |
Explanation : The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth. |
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis |
நன்றி: www.muthu.org
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 3/04/2007 10:22:00 AM 2 comments
Saturday, March 3, 2007
Hiii
Hi..
Have a nice day..........
Welcome to Our BLOGSPOT meant for Tamilians Abroad...
எழுதிய பறவை C.R at 3/03/2007 03:11:00 PM 0 comments