Wednesday, August 15, 2007

தாயின் 'Money' கொடி பாரீர் !!

"தாயின் மணிக் (Money) கொடி பாரீர், அதை தாழ்ந்து பணிந்து உயர்ந்திட வாரீர் !! தாயின் மணிக் கொடி பாரீர் !!
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே !! ..."

என்னடா மணிக் கொடியை 'Money' கொடி என்று மாற்றிவிட்டேன் என்று நினைக்கிறீர்களா? இப்போது வாழ்க்கை இவ்வாறு தானே சென்று கொண்டிருக்கிறது. எங்கும் பணம் எதிலும் பணம். பணத்தைத் தேடி தான் வாழ்க்கையின் பாதி செல்கிறது. மீதி பாதி குடும்பம், தூக்கம் இவ்வாறு செல்கிறது. இப்படி வாழ்க்கை போகும் போது நாட்டைப் பற்றி நினைக்க யாருக்கு நேரம் இருக்கு??

ஆனால் வீடு சிறந்தாலே நாடும் சிறந்து விளங்கும் என்பதால், அனைவரும் இந்தியா 60வது சுதந்திரம் தினம் காணும் இந்த நன்னாளில் பெரிதாக ஒன்னும் நினைக்கவோ செய்யவோ வேண்டாம், தன் தாய் தந்தை, பெரியோர்கள், உற்றார் உறவினர்களை நன்றாக பார்த்து, கவனித்துக் கொண்டாலே போதும். நாம் ஒவ்வொருவரும் முதலில் தன் வீட்டைக் கவனித்து நங்கு பார்த்துக் கொண்டாலே போதும் வீடு வளர்ந்தால் நாடும் தானாகவே வளரும். ஏனென்றால் ஆயிரம் வீடு சேர்ந்தது ஒரு நகரம். 10 நகரம் ஒரு மாநிலம். 28 மாநிலம் ஒரு நாடு நம் இந்திய நாடு...

No comments: