அன்பு வலைப்பதிவு நண்பர்களே!!
ஒரு பழைய படப் பாடல் உண்டு
"ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே!! வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே".
வலைப்பதிவு தமிழர்களுக்குள் தான் எத்தனை பிரிவுகள் எத்தனை பிரச்சனைகள். அதனால் எத்தனை சண்டைச் சச்சரவுகள். நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அதுவே பெரிய பூசலாக சண்டையாக மாறிவிடக்கூடாது. சண்டையிடும் இருவரும் முரன் பிடிக்காமல் யாராது ஒருவரேனும் விட்டுக்கொடுத்துப் போகலாமே?
நான் இங்கு (சௌதி அரேபியாவில்) ஒரு விஷயம் கவனித்தேன். வங்கதேசத்தாரும், மலையாளிகளும் மிகவும் ஒற்றுமையாக உள்ளனர். சரி வங்கதேசத்தார் ஒரே மதத்தால் ஒன்றுபட்டுள்ளனர் எனலாம். ஆனால் மலையாளியோ வெவ்வேறு மதமாயினும் சரி எங்கும் ஒன்றுபட்டேதான் காணப்படுகிறார்கள். அங்கு சாதி சமய வேறுபாடு எல்லாம் கிடையாது. ஆனால் தமிழர்களாகிய நம்மிடையே தான் எத்தனை வேற்றுமை?? சாதி வேற்றுமை, சமய வேற்றுமை, ஓ!! கணக்கிலடங்கா வேற்றுமைகள்!!
மற்றவருக்கு நல்ல கருத்துக்களை எழுதி அவர்களது ஒற்றுமையை வளர்க்க வேண்டிய வலைப்பதிவாளராகிய நாமே இப்படி சண்டை போடலாமா? வேலியே புல்லை மேயலாமா?? மாடுகள், புலி கதை உங்களுக்கு தெரிந்தது தானே. மாடுகள் ஒற்றுமையாய் இருந்ததாலே தப்பித்தது. பின் அவை சண்டையிட்டுத் தனித் தனியே சென்றதால் மாண்டு புலிக்கு இரையானது!!
தயவு செய்து யோசியுங்கள். இனியாவது ஒற்றுமையாய் இருங்கள். நாம் சண்டையிட்டால் நம் எதிரிக்குத்தான் கொண்டாட்டம். எனவே ஒற்றுமையாய் இருங்கள். வாருங்கள் நாம் ஒற்றுமையாய் இருந்து ஒரு நல்ல ஒற்றுமையான இந்தியாவை உருவாக்குவோம்.
பெ. செந்தில் அழகு.
Thursday, August 9, 2007
ஒற்றுமையால் உண்டு நன்மை !!
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 8/09/2007 11:18:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்லதோர் கருத்தை தெரிவித்து இருக்கிறீர்கள் தோழரே... ஆனால் கேட்பார்களா? குரங்கிற்கு புத்தி சொன்ன கொக்கின் கதையாகமல் இருந்தால் சரி. ஊர் பயணம் எப்பொழுது முடியும். அறுமையான பதிவு. படிக்க இன்னும் ஏறாலமாக் இருக்கிறது.
Post a Comment