Wednesday, July 4, 2007

பெரியாரின் கூற்று.

"தமிழன்"

பெரியார் சரியாகத்தான் கூறியுள்ளார். இன்றும் பெண்களின் நிலை அவ்வாறே தான் உள்ளது. பெண்களை நாம் ஒரு கேளிக்கை பொருளாகவோ அல்லது ஒரு பிள்ளை பெறும் இயந்திரமாகவோ தான் எண்ணுகிறோம். ஒரு உயிருள்ள, உணர்வுகளுள்ள பொருளாக நினைக்க மறுக்கிறோம். இன்னமும் பேருந்துகளில் ஆண் நாய்களின் உரசல்களும் தீண்டல்களும் நீடித்து தான் வருகிறது. இது மிகவும் வேதனைக்குரியது. வெட்கத்துக்குரியது.

இந்த கணிப்பொறியுகத்திலும் பெண்ணுக்கு சம உரிமைக் கொடுக்க நாம் மறுக்கிறோம். சென்னையில் பெண்கள் சிறப்பு எலக்டிரிக் டிரேயின் விட்டபோது பொதுமக்களிடையே எத்தனை எதிர்ப்புகள் வந்தது தெரியுமா? என் நண்பன் கூட அதை எதிர்த்துப் பேசியது எனக்கு மிகவும் வருத்தமளித்தது. பெண்களின் இந்த நிலை என்று மாறுமோ அன்று தான் இந்தியா வல்லரசு நாடாகும் என்பது உறுதி.

No comments: