Saturday, October 27, 2007

சுமித்ரா, என் காதலி!!

சுமித்ரா, என் காதலி!! முதல் பகுதியின் தொடர்ச்சி.


கேரளாவில் கோழிக்கோடு பக்கத்தில் ஒரு கிராமம், சுமியின் சொந்த ஊர். அங்கு இருந்த நாயர் கடையில் டீ சாப்பிட்டுவிட்டு பின் அந்த விலாசத்தின் வழியைக் கேட்டான். "மோனெ ஈ ரோட்டில போயி அவட ரைட்டில திருச்சு போயாலு நீ விசாரிச்ச இடம் வரும்" என்றார்.

வளர Thanks சேட்டானு சொல்லீவிட்டு. அந்த இடத்திற்கு விரைந்தான். சரியாக வீட்டைக் கண்டுவிட்டான். வீடு உள்ளிருந்து பூட்டியிருந்தது. கதவைத் தட்டினான். உள்ளிருந்து ஒரு குறள் "யாரானு". சந்தோஷ் "யான் சந்தோஷாம், சுமித்ரா கூட்டுக்காரன்"னு சொன்னான் (சுமியின் நட்பு கிடைத்தவுடன் பக்கத்து வீட்டு ஜோஸ் மூலம் சிறிது மலையாளம் கற்றுக் கொண்டான் சந்தோஷ்). உடனே கதவு திறந்தது. "நீங்களு ஆரானு, சுமி இவட இல்லை. அவங்களு வேறு இடத்து போயி. ஈ வீட்ட யங்களு மேடிச்சதாம்" என்று வீட்டிலிருந்து ஒருவர் வெளியே வந்து கேட்டார்.

"யான் பற‌ஞ்சுட்டில்லே, யானும் சுமியும் சென்னைல ஒரே கம்பெனில பணி புரிஞ்சு. சுமி அச்சன் சுகமில்லாம இருந்து, உடனே சுமி இவ்வட வந்து. பக்ஷேல் திருச்சு வந்துட்டில்ல" என்றான் சந்தோஷ்.

"ஓ!! அது சரி நிங்களுக்கு ஒரு விஷயமும் அறியாதோ!! சுமி அச்சன் மரிச்சுப் போயி. பின்ன கடங்காரங்க தொல்லை தாங்காம சுமியும் சுமி அம்மையும் ஈ வீடு, மற்ற சொத்து எல்லாத்தையும் விற்றுவிட்டு வேறு இடத்துப் போயி" என்றார் அப்பெரியவர்.

"சுமி address அறியுமோ" என்றான் சந்தோஷ்.

"ஏய் அறிந்திட்டில்ல மோனே" என்றார் அவர்.

போக்ரானில் செய்த அணுகுண்டுச் சோதனையை தன் இதயத்தில் யாரோ செய்தது போன்று இருந்தது அவனுக்கு. பின்பு அங்கு தனக்குத் தெரிந்த எல்லா இடங்களிலும் தேடிவிட்டு, சுமி கிடைக்காத்தால் சென்னைக்கு பெருந்துயருடன் வந்து சேர்ந்தான்.

பின்பு சென்னையில் சிறிது காலம் வேலைப் பழுவில் சற்றே சுமியை மறந்து இருந்தான். வீட்டில் பெண் பார்த்தார்கள். அவன் மனதில் சுமி இருந்ததால் எல்லா வரன்களையும் தட்டிக் கழித்தான்.

ஒரு சமயம் அவனது கம்பெனியில் ஆன்சைட் ஆப்பர் சந்தோஷுக்கும் அவன் நண்பன் சுரேஷுக்கும் வந்தது. முதலில் அதை மறுத்தான் சந்தோஷ். தன் காதல் விஷயம் அனைத்தும் அறிந்த சுரேஷின் தூண்டுதலால் பின்பு ஏற்றுக் கொண்டான்.

தூபாய்க்கு சந்தோஷும் சுரேஷும் வந்து சேர்ந்தார்கள். ஒரு மாதம் வேலையில் ஒன்றிவிட்டார்கள். முதல் மாத சம்பளம் வந்தது, சுரேஷ் "டேய் மச்சி நான் உனக்கு பார்ட்டி தரேன் டா" என்றான். சுமியை பிரிந்த சோகத்தில் இருந்த சந்தோஷ் வெகு நாட்களாக பாருக்கு செல்லவில்லை, எனவே இதையும் மறுத்தான். ஆனால் சுரேஷ் "டேய் எத்தனை நாள் அவளையே நனச்சுக்கிட்டு இருப்ப, வாடா இது உனக்கு கொஞ்சம் ஆருதலாய் இருக்கும்" என்றான்.

சந்தோஷ் "ஓக்கே டா உனக்காக வரேன், ஆனா அங்கு மூடு இருந்தால் தான் அடிப்பேன், Please don't compel me!" என்றான். "சரி ஓக்கேடா I'll not compel you, don't worry!" என்றான் சுரேஷ். அவர்கள் ஒரு டான்சிங் பார் சௌத் இந்தியன் அவுட்லெட் சென்றார்கள்.

சுரேஷ் பீர் அடிக்க துவங்கினான், ஒரு பின்ட், இரண்டு பின்ட், இப்படிப் போய்க் கொண்டே இருந்தது. சந்தோஷ் ஒரு பின்ட்டே அவனுக்குள் செல்லாமல் இருந்தது. அங்கு அனைவரும் குத்துப் பாட்டிற்கு ஆடிக் கொண்டிருந்தனர். தீடீரென லைட்ஸ் ஆஃப் ஆனது, "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்........ மார்கழித் திங்களள்ளவா, மதி கொஞ்சும் நாள் அல்லவா!!.." பாடல் ஒலித்தது, ஆடியது சுமி, முதலில் லைட்டிங்ஸ் இருந்ததால் அடையாளம் தெரியவில்லை, பின்பு அவளை கண்டு கொண்ட சந்தோஷ் "சுனாமியில் சிக்கியும் உயிர் தப்பியவர்" போன்று மிகுந்த சந்தோஷமடைந்தான்.

அவன் ஒரு சிறிய டிசு பேப்பரில் "Hai Sumi!! This is Santhosh here. Do u remember me? Please call me after ur programme is over. My number is 0505566778." என்று எழுதி பார் மெனஜரிடம் கொடுத்து அவளிடம் கொடுக்கச் சொன்னான். அதைப் படித்தவுடன் சுமிக்கு தலை கால் புரியவில்லை. கூட்டத்தில் தேடினாள் ஆனால் சந்தோஷ் தன்னை மறைத்துக் கொண்டான். சுமிக்கு ஒவ்வொறு நிமிடமும் ஒரு யுகம் போல சென்றது.

எல்லாம் 3 மணிக்கு முடிந்தது. 3:05 மணிக்கு சந்தோஷுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது. அவன் சிறிது விளையாட நினைத்தான். எனவே திருப்பி கூப்பிடவில்லை. சில நேரம் கழித்து சுமி சிறிதே பாலன்ஸ் இருந்தாலும் கால் செய்தாள், அதை சந்தோஷ் கட் செய்தான். பின்பு சிறிது நேரம் சென்று சந்தோஷ் கால் செய்தான். ஓவென்று ஒரே அழுகை. நடந்தது அனைத்தையும் கூறினாள். சந்தோஷ் "முதலிலேயே என்னை அனுகினால் எந்த பிரச்சனையும் வந்திருக்காது, சரி Past is Past. Let us think about the future. I'll talk to the Bar Manager and get you back to India."‍ என்றான். பின்பு "டேய் சுமி ஐ லவ் யூ டா!! வில்யூ மெரி மீ?" என்று தன் காதலை பட்டென்று உடைத்துவிட்டான். சுமி "ஐ டூ." என்றாள்.

சுமியை அங்கிருந்து விடுவித்து, இந்தியா கூட்டிச் சென்று தன் பொற்றொர் சம்மதமும், சுமி அம்மாவின் சம்மதமும் பெற்று திருமணம் முடித்து, முடித்த கையோடு துபாய்க்கு Family Visa எடுத்து கூட்டிவந்து விட்டான்.



முக்கிய அறிவிப்பு:
"பீர், மது அடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் தீங்கானது!!"

No comments: