Wednesday, July 11, 2007

இலங்கையின் பொருளாதாரம்.

இலங்கை ஒரு இயற்கை வளம் மிகுந்த நாடு. அங்கு விளையும் பயிர்களில் தேயிலை மற்றும் காபிக் கொட்டை மிகவும் முக்கியமானது. அங்கு தேங்காய் மற்றும் இரப்பர் மரங்களும் பயிரிடப்படுகிறது. நல்ல கணிமங்களும் மிகுந்தது. சரி நாம் விஷயத்திற்கு வருவோம். இத்தனை வளம் இருந்தும் ஏன் அங்கு வளர்ச்சி இல்லை? மக்கள் ஏன் வெளி நாட்டிற்கு சென்று கஷ்டப்படுகிறார்கள்? உலகில் அதிகமான வீட்டு வேலை செய்யும் பெண்கள் விசா (ஹவுஸ் மேய்டு) இலங்கைக்குத்தான் வழங்கப்படுகிறது. அங்கு உள்ள பெண்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேருகிறார்கள். வளைகுடா நாடுகளில் ஹவுஸ் மேய்டு விசாவில் வரும் அவர்கள் படும் பாடு சொல்லித்தீராது.

இவை அனைத்திற்கும் காரணம் அங்கு நடந்து வரும் விடுதலைப் புலியினருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் நடக்கும் யுத்தம். அது எப்போது முடியும்? ஏன் இந்தியா இதில் தலையிட மறுக்கிறது? ஒரு காலத்தில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது வங்கதேசம் பாக்கிஸ்தான் இடையே நடந்த யுத்தத்தில் ‌தலையிட்டு அங்கு அமைதி நிலை உருவாக்கிக் கொடுத்தார். அதே போல் ஏன் இலங்கை யுத்தத்திலும் தலையிட்டு அங்கும் அமைதி நிலை உருவாக்கிக் கொடுக்கக் கூடாது?

இந்திய பிரதமர் நார்வே பிரதமரிடம் இலங்கையில் அமைதிப் பேச்சு‍ நடத்தக் கோரிக்கை விடுத்தாராம்! ஏன் இந்தியாவால் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த இயலாதா? இந்தியாவின் மக்கட்தொகையிலும் சரி வளர்ச்சியிலும் சரி தமிழர்கள் ஒரு முக்கியப் பங்கு வகித்து வருகிறார்கள். அதே தமிழர்கள் தான் அங்கும் உள்ளனர். அத்தமிழர்களையாவது மனதில் கொண்டு இந்திய அரசு அப்பிரச்சனையில் தலையிட்டு ஒரு நல்ல சுமூகமான தீர்வு காணலாமே.

அப்பிரச்சனையில் இந்தியா தலையிட வேண்டும். இலங்கையில் வெகு விரைவில் அமைதி நிலைத் திரும்ப வேண்டும். இப்படிச் சொல்வதால் நான் எந்த ஒரு இயக்கத்தையும் சார்ந்தவன் என்று எண்ண வேண்டாம். நான் உலகத் தமிழர்களின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட ஒரு சாதாரண தமிழன் அவ்வளவுதான்..

6 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

அனைவரையும் சிந்திக்க வைக்கும் அர்த்தமுள்ள கேள்வி. யாருக்கு என்ன நேர்ந்தால் நம்க்கு என்ன என்ற மனப்பான்மை ஒழியும் வரை இதற்கு தீர்வு கிடைக்காது. ஒரு வேலை ஈழத் தழிழர்களுக்கு தனி நாடு கிடைத்துவிட்டால் சென்னை தமிழர்களும் தனி நாடு கேட்பார்களே என பயப்படுகிறார்களோ?!

http://vaazkaipayanam.wordpress.com/

Senthil Alagu Perumal said...

அன்புள்ள விக்னேஷ்,
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. ஈழத் தமிழர்களுக்குத் தனி நாடு கொடுப்பது தான் இதற்கு தீர்வு என்பது கிடையாது. அவர்களுக்குச் சம உரிமை கொடுத்து அவர்களுக்கு ஆட்சியிலும் பங்கு கொடுத்தால் அவர்களின் நிலை தானாக உயரும் அல்லவா? இவ்வாறு கூட அப்பிரச்சனைக்குத் தீர்வு காணாலாமே!!

Unknown said...

செந்தில் அழகு பெருமாள்,

//இவை அனைத்திற்கும் காரணம் அங்கு நடந்து வரும் விடுதலைப் புலியினருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் நடக்கும் யுத்தம்.//

இப்படித்தான் நானும் பல நாட்கள் நினைத்திருந்தேன். ஆனால் உண்மை அதுவல்ல. பிரச்சினையை ஆரம்பித்தவர்கள் சிங்களவர்கள் மற்றும் அவர்களது இனவெறி. அவர்களின் இனவெறியின் வேரைத்தெரிந்து கொள்ள நீங்கள் மஹாவம்சம், துட்டகைமுனு, ஏலேலசிங்கன் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும். இலங்கைப்பிரச்சினைக்கான தீர்வு ஆயுதப்போராட்டத்தினாலேயே கிடைக்கும் என்னும் தீர்மானம் வேறு வாய்ப்புகள் அனைத்தும் அடைக்கப்பட்ட சூழ்நிலையில் பிரபாகரனுக்கு முந்தைய போராட்டக்காரர்களாலேயே எடுக்கப்பட்டுவிட்டது. இந்த போர் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடக்கும் தனிப்பட்ட யுத்தம் அல்ல.

//ஈழத் தமிழர்களுக்குத் தனி நாடு கொடுப்பது தான் இதற்கு தீர்வு என்பது கிடையாது. அவர்களுக்குச் சம உரிமை கொடுத்து அவர்களுக்கு ஆட்சியிலும் பங்கு கொடுத்தால் அவர்களின் நிலை தானாக உயரும் அல்லவா?//

ஈழத்தமிழர்களின் நிலை உயரவேண்டும் என்பதெல்லாம் இப்போது பிரச்சினை இல்லை. அவர்களின் நிலை ஏற்கனவே உயர்ந்துதான் இருந்தது. அதைக்கண்ட எரிச்சலில் விளைந்ததுதான் சிங்கள இனவாதம்.

நான் மேலே சொன்னவையெல்லாம் எனது சமீபத்தைய வாசிப்புகளினாலும், சில இலங்கை நண்பர்கள் பகிர்ந்து கொண்டவைகளாலும் எனக்குள் ஏற்பட்டக் கருத்துக்கள். இதை விட சிறப்பாக விளக்க நிறைய பேர் இந்த வலைப்பதிவுலகில் இருக்கிறார்கள்.

Senthil Alagu Perumal said...

அன்புள்ள‌ உமையணன் ஐயா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

// ஏதேனும் தவறோ பிழையோ குறையோ இருப்பின் எங்களை மன்னித்து எங்களிடம் தெரிவிக்கவும்! //

என்று நான் ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ளேன். எனவே தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும். ஏதோ என் அறிவுக்கு எட்டிய வரை எழுதியிருந்தேன். நான் எனது பொழுதுபோக்கிற்காக எழுதுபவன். "Professional" எழுத்தாள‌ர் கிடையாது. நேரம் கிடைக்கும் போது சில படைப்புக்களை படிப்பேன் அவ்வாறு படிக்கும் போது இவை போல இலங்கைப் பற்றிய சில தகவல்களைப் படித்தேன். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது. அதை வைத்து எழுதினேன். எனது நேக்கமெல்லாம் இலங்கையில் பிரச்சனை தீர வேண்டும். தமிழர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் எந்த துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்...

Unknown said...

// தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.//
செந்தில் அழகு பெருமாள் பெரிய வார்த்தயெல்லாம் சொல்லவேண்டாம். நான் உங்களை குறை கூறுவதாக நினைக்காதீர்கள். நான் எனது கருத்துக்களையே சொன்னேன். யோசித்துப்பார்த்து சரியென்று படுவதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

Senthil Alagu Perumal said...

அன்பு நண்பர் உமையணனுக்கு , நான் தாங்கள் கூறியதை தவறாக எண்ணவில்லை. தாங்கள் கூறியது சரியே!!