Monday, July 2, 2007

சிவாஜி - என் கண்ணோட்டம்

சிவாஜி பற்றி நிறைய விமர்சனங்களை நாம் படித்துவிட்டோம். சிலர் குறை கூறினர், வேறு சிலர் அவற்றுள் உள்ள நிறையை கூறினர். நான் நேற்றுதான் சிவாஜி, திருட்டு விசிடி மூலம் பார்த்தேன் (தயவு செய்து மன்னிக்கவும், நான் சௌதி அரேபியாவில் உள்ளேன் இங்கு திரை அரங்கு கிடையாது, எனவே திருட்டு விசிடி தான் ஒரே வழி). நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன் இருந்தும் ஏனோ நான் எதிர்ப் பார்த்த அளவுக்கு படம் இல்லை. சந்திரமுகி படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் அந்த படத்தை குறைந்தது 20 முறையாவது பார்த்து இருப்பேன். எனக்கு அன்னியன் படம் கூட பிடித்திருந்தது. ஆனால் சிவாஜி நான் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை.

என்ன காரணம் என்று நான் யோசனை செய்தேன். காரணம் புரிந்து விட்டது. சங்கர் படம் என்றாலே ஒரு எதிர்ப் பார்ப்பு இருக்கும். அதுவும் சங்கரும் சூப்பர் ஸ்டாரும் சேர்ந்து செய்ததால் நாம் அதிகம் எதிர்ப்பார்த்து விட்டோம். படம் நம் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்ய தவறிவிட்டது. ஆனால் உலக அளவில் தமிழ் படத்திற்கு பெருமை சேர்த்துவிட்டது.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் மூலம் மெல்போர்ன் நகர் திரை அரங்கில் மிகவும் அதிக டிக்கட் விலை போன‌ படம் சிவாஜி என்று தெரிந்து கொண்டேன். எத்தனையோ ஆங்கிலப் படங்கள் அங்கு திரையிடப்பட்டுள்ளனவாம் இருந்தும் சிவாஜி டிக்கட் விலை அவற்றை விட அதிகம் போனது என்பது பெருமைக்குரியது. மேலும் பல சாதனைகளை முறி அடித்துவிட்டது சிவாஜி என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி ஒரு சிற‌ந்த‌ க‌ம‌ர்சிய‌ல் ப‌ட‌ம்...

2 comments:

PPattian said...

You should have watched in Big Screen. Then only you'll like the movie. There is a huge difference in watching in Big Screen and DVD.

Watch it in big screen whenever possible , you will definitely change your opinion.

Senthil Alagu Perumal said...

Dear Pattian,

Thank you for your comment. But I don't know what will be the difference in story if I watch it in Big Screen & CD. Anyway I'll definitely watch it in Big Screen when I will come to India.

With Kind Regards,
Senthil Alagu .P.