Sunday, August 5, 2007

கணவன் மனைவியை அடிக்கலாமா?

என் நண்பன் ஒருவன் (திருமணமானவன்) நேற்று என்னிடம் தொலைப்பேசியில் கூறினான் "டேய் நேற்று, எனக்கும் என் மனைவிக்கும் பயங்கரச் சண்டை. நான் பேச பேச அவள் எதிர்த்துப் பேசினால். உடனே எனக்கு கோபம் மிகுதியாகி நான் அவளை அடித்துவிட்டேன். அவள் கோபித்துக் கொண்டு அவள் அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டாள். நான் இப்போது என்ன செய்ய?" என்றான். நான் சொன்னேன் "அடப் பாவி ஏன்டா அடிச்ச. ஆனாலும் இது ரெம்ப ஓவர்டா. போ போய் சாரி கேட்டு சமாதானம் செஞ்சு கூட்டிக்கிட்டுவா" என்றேன். அதற்கு அவன் "நான் ஏன்டா கூப்பிடனும். அவமேலதான் தப்பு அவளே உணர்ந்து வருவாள்" என்றான். நான் "டேய் முட்டாப் பயலே!! முள்ளுமேல சேல விழுந்தாலும் சேல மேல முள்ளு விழுந்தாலும் நட்டம் என்னவோ சேலைக்குத்தான்டா. போய் ஒழுங்கா மன்னிப்புக் கேட்டு, அவங்களை வீட்டுக்குக் கூட்டிவா" என்றேன். அவன் "நீ சொல்வது சரிதான்டா. நான் அப்படியே செய்கிறேன்" என்றான்.

என் நண்பன் மாதிரி எத்தனை பேர் இங்கு இருக்கிறார்கள். இந்த கணிப்பொறி உலகத்திலும் இன்னும் மனைவியை அடிக்கும் கணவன்மார்கள் இருப்பது மிகவும் வருந்தக் கூடிய விஷயம். ஒரு மனைவி என்பவள் வயதில் சிறியவாளாய் இருந்தாலும், கணவனுக்கு ஒரு தாய் போன்றவள். சும்மாவா சொன்னார்கள் பெரியோர்கள் "தாய்க்குப் பின் தாரம்" என்று? ஒரு தாயை அடிப்பவன் எவ்வளவு மூடனாக, காட்டானாக இருப்பானோ, அவனைவிட முட்டாளாக மோசமானவனாக இருப்பவன் மனைவியை அடிப்பவன்.

"செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கா லென்" என்ற வள்ளுவர் வாய் மொழிக்கிணங்க, மனைவியிடம் சினம் செல்லும். அந்த செல்லிடத்தில் சினங்காப்பவன் மிகவும் மேலானவன், என்று கூறி இத்துடன் இந்தப் பதிவை முடித்துக் கொள்கிறேன்.

மறவாமல் தங்கள் கருத்தை வெளியிடவும். நன்றி!!

4 comments:

குசும்பன் said...

என்னிடம் ஒரு நண்பர் சொன்னார்,
என்னை அவள் அடிக்க, அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க, அவள் என்னை அடிக்க இப்படி
செம சண்டை எங்க வீட்டில் என்றான்...:)

Senthil Alagu Perumal said...

உங்களுக்கு ரெம்ப தான் குசும்பு. இனிமேல் நீங்கள் தான் எங்க ஊர் குசும்பன்!!!

VIKNESHWARAN ADAKKALAM said...

superu kalakidinga... 6/8/2007 pathivai padika mudiya villai... veliyooril irukiren viddirku sendru new font install seithu padikiren. thodarnthu kalakunga...

http://vaazkaipayanam.wordpress.com/

Cool said...

செந்தில், நீங்க கல்யாணம் பண்ணிட்டு இதை படிச்சி பாருங்க அப்போ உங்களுக்கே சிரிப்பா வரும்..

ஸ்ரீதர்