Monday, July 23, 2007

காவல் துறையினர் பற்றி...

எனது முந்தைய பதிவுக்கு பதில் எழுதிய நண்பருக்கு இது பதில் கொடுப்பது போன்று அமையும்.


எனது அன்பு இசுலாமிய நண்பருக்கு, நான் மேலும் மதத்தைப் பற்றி பேசி ஒரு மதக் கலவரத்தை உண்டாக்க விரும்பவில்லை, ஏன்னெனில் எமக்கு எம்மதமும் சம்மதமே! சொன்னால் நம்ப மாட்டீர் எனக்கு இசுலாமிய மதத்தில் தான் நிறைய நண்பர்கள் உள்ளனர். மதத்தைப் பற்றி பேசி நான் அவர்கள் மனதைப் புண் படுத்த விரும்பவில்லை. நான் மதத்தைவிட மனிதர்களின் மனதை மதிப்பவன். இதற்கு முன்னர் எழுதிய மடலால் எவர் மனமாவது புண் பட்டிருந்தால் என்னை தயவு செய்து மன்னிக்கவும். சற்று சாதி சமயத்தை மறந்து வேறு திசையில் சிந்தித்துப் பார்ப்போம்.


நீங்கள் எப்படி காவல் துறையினர் கிடா வெட்டுவதோடு நிறுத்திவிட்டனர், குற்றாவாளிகளைக் கண்டுபிடிக்க மேற்கொண்டு முயற்சிகள் செய்ய வில்லை என்கிறீர்கள்? நீங்கள் எந்த ஒருச் செயலைச் செய்யும் முன்னே "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்" என்று சொல்லிவிட்டுதானே துவங்குகிறீர் அதைப் போல், அவர்கள் (காவல் துறையினர்) கிடா வெட்டி விட்டு அவர்கள் குல தெய்வத்திற்குப் படைத்துவிட்டு பின்னர் குற்றாவாளியை தேட ஆரம்பிக்கலாம் அல்லவா? தயவு செய்து காவல் துறையினரை பலிக்காதீர் நண்பரே. நாம் இந்தியாவில் இத்தனை சுதந்திரமாக இருக்கிறோமேயானால் அதற்கு அவர்கள் உழைப்பு தான் காரணம். நாம் நிம்மதியாக கண் தூங்குவதற்கு அவர்கள் இரவு பகல் பாராது கண் விழித்துத் தன் கடமையை நிறைவேற்றுகிறார்கள்.


அவர்களுக்கு இந்த சமுதாயமும் அரசாங்கமும் என்ன செய்கிறது? இராணுவத்தில் இருப்பவற்கு இலவச ரேசன், கண்டீன் வசதி, ஓய்வு பெற்றோருக்கு வேலை வாய்ப்பு போன்று பல சலுகைகள் உள்ளன. பாவம் காவல் துறையினருக்கு என்ன உள்ளது?


இராணுவத்தினருக்கு போர்க்காலத்தில் தான் வேலை, ஆனால் காவல் துறையினருக்கோ வருடம் 365 நாட்கள், வாரம் 7 நாட்கள், ஒரு நாளுக்கோ 24 மணி நேரம் வேலை!! ஆனால் இறுதியில் நாம் என்ன சொல்கிறோம் காவல் துறை தூங்குகிறது, இலஞ்சம் வாங்குகிறது, குற்றவாளிகளைப் பிடிக்காமல் கிடா வெட்டுகிறது என்று!!


ஓரிரு காவல் துறை அதிகாரி இலஞ்சம் வாங்குவதால் நாம் ஒட்டு மொத்த காவல் துறையையும் குற்றம் சொல்லலாகாது. அப்படிப் பார்த்தால் நாட்டைக் காக்க வேண்டிய இராணுவத்தினரும், இத்த‌னைச் சலுகைக‌ள் இருந்தும் ப‌ணம் வாங்கிக் கொண்டு நாட்டைக் காட்டிக் கொடுக்க‌வில்லையா? ஒரு உயிரைக்காக்க வேண்டிய மருத்துவரும், நீதிபதியும் காசு கொடுக்காததால் அவர்கள் கடமையைச் சரிவரச் செய்யத் தவறவில்லையா? அவர்க‌ளுக்கு காவ‌ல் துறையின‌ர் எவ்வ‌ள‌வோ மேல்.


2 comments:

Unknown said...

இல்லை நண்பரே.
நம் நாடு பல சமயங்கள் ஒன்றினைந்து வாழும் நாடு. நம்மை நாம் செக்குலர் நாடு என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறோம். வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியா.

மதம் அவரவர்களின் விருப்புகளுக்கேற்ப உள்ள தனிப்பட்ட சமாச்சாரம்.

பொதுவிடத்தில் அதிவும் குறிப்பாக அரசு சம்பந்தப்பட்ட இடங்களில் ஒரு குறிப்பிட்ட சமயம் சார்ந்ததை பொதுவில் செய்யக்கூடாது - சாமி படங்களை பெரிதாக மாட்டுவது உள்பட.

ஒருவருக்கு கிடா வெட்ட தோன்றியது போல, மற்றவருக்கு கூட்டு ஜெபம் செய்யவும், இன்னொருவருக்கு கூட்டுத்தொழுகை நடத்தவும் தோன்றலாமல்லவா? இது எங்கே கொண்டு போய் முடிக்கும்!

இப்போது அரசு சார்ந்த இடங்களில் அல்லது காவற்பணிகளில் 'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' என்று சொல்பவரும் தனக்கு மட்டுமே சொல்லிக் கொள்ள வேண்டும் - அதைப் பார்ப்பதாலோ கேட்பதாலோ மற்றவர்களுக்கு வேறெண்ணங்கள் தோன்றாதவாறு.
(இந்த word verification எடுத்துரலாமே!)

Senthil Alagu Perumal said...

அஸ்ஸலாமலைகும்!! சுல்தான் பாய். நீங்கள் கூறியது போல் நம் நாடு மதச் சார்பற்ற நாடு. இங்கு அவரவர் மதத்தை அவரவர் சுதந்திரமாக பின்பற்றலாம். அப்படி இருக்கும் போது அந்தக் காவலர் ஏன் அவர் மதத்தை தழுவிய செயல்களைச் செய்ய தடைவிதிக்கிறீர்? அவரது செயலால் எவரேனும் பாதிக்கப் பட்டுள்ளனரா?