Friday, October 26, 2007

சுமித்ரா, என் காதலி!!

சுமித்ரா, ஒரு மலையாளப் பெண். நடுத்தர குடும்பம். அவளுக்கு சிறிய வயதிலிருந்தே நாட்டியத்தின் மீது தீராத ஆசை. மோகினி ஆட்டம், கதகலி ஆட்டம் போன்ற கேரளத்து நடனக்கலைகளை கற்று வந்தாள். அவளது தந்தைக்கு ஒரே பெண்ணாதலால் மிகுந்த பாசத்துடன் வளர்த்தார். அவளுக்கு பரத நாட்டியத்தின் மீது எப்போதுமே ஒரு கண். குடும்ப நிலை காரணமாக கற்க முடியாமல் போனது. நேரம் கிடைக்கும் போது பத்மா சுப்ரமணியம் அவர்களின் நாட்டியத்தை தனது தொலைக்காட்சியில் கண்டு அதைப்போல ஆடிப் பழகுவாள். கேரளத்தில் கோழிக் கோட்டில் ஒரு கல்லூரியில் பி.காம். படித்து முடித்தாள்.


சந்தோஷ் சென்னையில் பிறந்து வளர்ந்தவன். ஒரே பையனான அவனுக்கு வீட்டில் செல்லம் அதிகம். தொலைத்தொடர்பு மற்றும் கணிணியைச் சார்ந்த பணி புரிந்து வந்தான்.


சுமித்ராக்கு சென்னையில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் சம்பந்தப்பட்ட ஒரு வேலை கிடைத்தது. குறைந்த சம்பளம் தான் ஆனால் நல்ல வேலை. தன் தந்தையும் வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார், குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய கட்டாயம். எனவே சென்னை வந்துவிட்டாள்.


அதே கம்பெனியில் தான் சந்தோஷ் சாப்ட்வேர் பிரிவில் வேலை பார்த்தான்.

ஒரு முறை கம்பெனி கெட்டுகெதர். சுமித்ராவின் பரத நாட்டியம். சந்தோஷ் செம மப்பில் இருந்தான். ஒரே கலாட்டா!! பின்பு நடனம் ஆரம்பமானது. ஓ!! என்ன ஒரு நடனம் அப்படி ஒரு நடனத்தை இது வரை அங்கு யாருமே கண்டதில்லை. உடனே அந்த அரங்கமே அமைதியாக நடனத்தைக் கண்டு ரசித்தது. முடிந்தவுடன் அரங்கமே அதிரும் அளவுக்கு அப்படி ஒரு கரகோசம். அனைவரும் பாராட்டினார்கள். சந்தோஷுக்கு ஒரே வருத்தம், இப்படி நல்லவொரு நடனத்தை நடத்தவிடாமல் அவமதித்துவிட்டோமே என்று.


மறுநாள் அலுவலகத்தில் தனது அலுவலக மின்னஞ்சல் (Microsoft Outlook) மூலம் அவளது பெயரை வைத்து அவளது மின்னஞ்சல் விலாசத்தைத் தெரிந்து கொண்டு, பின் அவளுக்கு ஒரு மேய்ல் அனுப்பினான்.

"நேற்று உங்கள் நடனம் மிக அருமை. நான் அங்கு கூச்சலிட்டு தகராறு செய்ததற்கு மிகவும் வருந்துகிறேன். ஒரு நல்ல கலைஞியை அவமதித்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்" என்று.


அதைக் கண்ட சுமித்ரா, "பரவாயில்லை நீங்கள் வேண்டுமென்று செய்யவில்லை. அதனால் ஒன்னும் குழப்பமில்லை கேட்டோ" என்று பதில் கொடுத்தாள்.


பின்பு தினமும் ஒரு மேய்ல் சந்தோஷ் சுமித்ராக்கு அனுப்புவான். அவளும் ப‌தில் அனுப்புவாள். ஒரு மேய்ல் இரண்டானது, இரண்டு மூன்றானது அப்படியே தொடர்ந்தது. தன் குடும்பத்தைப் பற்றி, அன்று நடந்த விஷயங்களைப் பற்றி, மற்றும் எல்லா செய்திகளையும் பரிமாறிக் கொண்டனர்.


இப்படி மின்னஞ்சல் மூலம் அவர்களது நட்பு தொடர்ந்தது. பின்பு இருவரது எண்ணங்களும், கருத்துக்களும் ஒன்று பட்டதால் நட்பு மெதுவாக காதலானது. ஆனால் இருவரும் அவரவர் காதலை தெரிவிக்கவில்லை. நேராகக் கண்டால் ஹாய்!! ஹலோ!! என்று பேசிக் கொள்வார்கள். மற்றபடி சினிமா, பார்க், டேடிங் என்று சுற்ற மாட்டார்கள். ஒரு அமைதியான தெய்வீகக் காதல்!!


ஒரு நாள் கேரளத்திலிருந்து ஒரு கால். சுமித்ராவின் அப்பா மிகவும் சீரியஸ். உடனே சுமி அடுத்த பேருந்தைப் பிடித்து கேரளா வந்து விட்டாள். இது சந்தோஷுக்குத் தெரியாது. பல மேய்ல்கள் அனுப்பியும் பதிலையே காணோம். தன் அலுவலகத்தின் Receptionist மூலம் செய்தி அறிந்த சந்தோஷ் கேரளா செல்ல முடிவு செய்தான். தன் அலுவலகத்திலிருந்து சுமியின் விலாசத்தையும் பெற்றுக் கொண்டான். தன் மனதில் சுமி மேல் இருந்த காதலையும் வெளிப்படுத்த நினைத்தான். தன் அலுவலகத்தில் 10 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு, வீட்டில் நண்பன் கல்யாணம் என்று பொய் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் கேரளாக்கு!!


(இரண்டாம் பகுதி நாளைத் தொடரும்)

2 comments:

C.R said...

mmm Nice to see.
But ANDA MOBILE NUMBER YARODADUUU

Senthil Alagu Perumal said...

That is a Karpanai number. Not true number. Please don't call that number and cause problem. :D