கல்வியா செல்வமா வீரமா? இது சரஸ்வதி சபதத்தில் சிவாஜி பாடியது !! உண்மையில் இது மூன்றுமே மனிதனின் இன்றியமையாத குணங்கள். இவை மூன்றிற்கும் பெண் கடவுளைப் படைத்தது நமது இந்து மதம் தான் !!!
அது மட்டுமா, ஒரு கணவன் மனைவிக்கு சம உரிமை தர வேண்டும் என்பதை உணர்த்த அக்காலத்திலேயே சிவ பெருமான் தன் உடலிலும் பாதியை தன் மனைவியான் சக்திக்கு கொடுத்தார். இப்படிப் பட்ட மகத்துவம் கொண்டது இந்து மதம்.
நன்கு விளைந்த பயிரினுள் களை எனப்படும் விசச் செடி புகுந்தது போல இத்தகைய மகத்துவம் வாய்ந்த இந்து மதத்தினுள் சாதி புகுந்து விட்டது. ஆனால் களைச் செடிக்காக பயிரை அழிப்பது நியாயமா? களை எனப்படும் சாதியைத் தான் நாம் இந்து மதத்தைவிட்டு எடுக்க வேண்டும் !!
பெரியாரின் கருத்து சாதியை ஒழிக்க வேண்டும் என்பதே தவிர இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்பது கிடையாது. பெரியாருக்கு சாதி மீது தான் கோபம் இந்து மதத்தின் மீது கிடையாது. இந்து மதம் பெரியார் கூறுவதை விட பெண்களுக்கு உயர்வான இடத்தைத் தருகிறது. இப்படிப் பட்ட இந்து மதத்தை அழிக்க வேண்டுக் என்று சொல்பவர்கள் மூடர்கள். கொசுக்களுக்காக நாம் வீட்டை எரிக்கலாமா? எனவே வாருங்கள் தோழர்களே நாம் ஒன்று கூடுவோம் சாதியை எதிர்ப்போம், இந்து மதத்தை அல்ல !!!
Sunday, September 2, 2007
பெண்களுக்குச் சம உரிமை கொடுக்கும் இந்து மதத்தை நாம் அழிக்கலாமா?
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 9/02/2007 10:53:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பெருமாள்,
இந்துமதம் பெண்களை எந்த விதத்தில் சமமாக நடத்தியது என கொஞ்சம் விளக்கமாக சொல்வீர்களா? சிவனின் பாதியாக பார்வதி இருந்தது பற்றியதல்ல கேள்வி. நடைமுறையில் பெண்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதை பற்றியதே கேள்வி.
இந்துமதம் அழிக்கப்படவேண்டும் என்பதற்கான விவாதம் தங்கமணி அவர்கள் பதிவில் இருக்கிறது. அங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் சேர்த்து பதில் சொல்லுங்கள்.
திரு
// இந்துமதம் பெண்களை எந்த விதத்தில் சமமாக நடத்தியது என கொஞ்சம் விளக்கமாக சொல்வீர்களா? //
திரு அவர்களே விடிய விடிய இராமாயணம் கேட்டுவிட்டு பின் சீதைக்கு இராமன் சித்தப்பன் என்கிறீரே. அதான் இந்து மதம் எப்படி பெண்களை நடத்துகிறது என்று முன்னரே கூறினேன். இப்போது நடைமுறையில் உள்ளது ஆணாதிக்க வாதியின் செயல். இந்து மதத்தின் கொள்கையல்ல.
// தங்கமணி அவர்கள் பதிவில் இருக்கிறது. அங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் சேர்த்து பதில் சொல்லுங்கள். //
Please give me the link. Also I'm not an expert in Hinduism to answer such questions. But my opinion is We need some sort of Guide lines and principles to lead a very good life. I think Religion will serve this purpose. If men are really God fearing then there are less chances of crimes !!
என்ன செய்வது? ஒற்றுமை கொட்ட இனமாய் அல்லவா இருக்கிறது நம் தமிழ் இனம்.
Post a Comment