சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குருவி பார்த்தீர்களா? அதில் நம்ம தலைவரு விஜய் எப்படி மலேசியா போவார்? பாய்னு ஒருத்தர் மூலம் கடத்தல் பொருட்களை எடுத்துக் கொண்டு குருவியாக போவார்! சரி அது இருக்கட்டும்.
சிவாஜி படம் பார்த்தீர்களா? அதில் இந்தியாவிலிருந்து நம்ம சூப்பர் ஸ்டார் கருப்புப் பணத்தை எல்லாம் எப்படி வெள்ளையாக்குவார்? ஒரு பாயிடம் கொடுத்து ஹவாலா செய்து! ஏன்யா இசுலாமியர் மட்டும் தான் உலகிலுள்ள எல்லா குற்றமும் செய்வார்களா? மற்றவர்கள் ஒரு குற்றமும் செய்யா உத்தமர்களா? ஏற்கனவே இந்தியாவில் இசுலாமியருக்கும் இந்துக்களும் பயங்கரமான பிரச்சனை போய் கொண்டிருக்கிறது நீங்க வேற ஏங்க? சினிமாகாரங்க நல்லது ஒன்னும் செய்யமுடியவில்லைனா சும்மாவாது இருக்கலாம்ல அத விட்டுட்டு ஏன் இப்படி எரிகிற நெருப்புல எண்ணையை ஊற்றுகிறீர்?
உண்மையை சொல்ல வேண்டுமேயானால் இசுலாமில் மது அருந்துவதும் விலைமாதரிடம் செல்வதும் வட்டி வாங்குவதுவும் கூட பாவம். அப்படிப் பட்டவரா கடத்தல் ஹவாலா போன்றவற்றில் ஈடுபடுவார்?? இனிமேலாவது சினிமா எடுக்கும்போது பார்த்து எடும்!! இப்படி எடுத்துவிட்டு தயவுசெய்து இந்துக்களுக்கும் இசுலாமியருக்கும் பிரச்சனைமூட்டாதீர்!!
Thursday, July 17, 2008
இசுலாமியர்கள் என்ன திருடர்களா???
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 7/17/2008 07:30:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
சகோதரரே!தசாவதாரம் கண்டீரா,முஸ்லிம்கள் தீவிரவதிகள் இல்லை என்றும்,புஷ் தான் உண்மையான தீவிரவாதி என்றும் அழுத்தமான பதிவுகள்.தமிழன் இந்துவாகிலும் முஸ்லிமுக்கு ரத்தம் கொடுப்பவர்கள் தான் என்றும்,ஒரு ஆச்சாரமான இந்துப் பாட்டி தலித்தை தன் மகன் என்று சொல்வதும் வலிமை மிக்க இந்தியாவின் யதார்த்தங்கள்.யதார்த்தங்களை யாரும் மாற்றிடமுடியாது.தசாவதாரம்
போன்ற திரைப்படங்களை நாம் வெற்றியாக்குவோம்.
வீழ்வது யாராகிலும் வாழ்வது நாடாகட்டும்.
//சினிமாகாரங்க நல்லது ஒன்னும் செய்யமுடியவில்லைனா சும்மாவாது இருக்கலாம்ல அத விட்டுட்டு ஏன் இப்படி எரிகிற நெருப்புல எண்ணையை ஊற்றுகிறீர்?//
Dude,
Did you realized that you are exactly doing the same?
ஷாஜகான் நண்பரே தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. ஆம் நீங்கள் சொல்வது சரிதான்.
அனானி நண்பரே நீங்க என்ன சொல்ல வரீங்க? உண்மையை சொன்னால் என்ன எண்ணேயை ஊற்றுகிறேன் என்று பிதற்றுகிறீர்?
:) ஏன் இந்தக் கடுப்பு
வாங்க விக்ணேஷ்வரன் அவர்களே தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. மலேஷியா எல்லாம் எப்படி இருக்கிறது? கொஞ்சம் வேலைப்பழு அதிகம் ஆனதால் இப்போது சரியாக வலைப்பூவில் பங்கு பெறமுடியவில்லை மன்னிக்கவும்.
People who work as 'KURUVI',they don't take materials illegally.They work as just transporter. Some more Muslims are more in number to involve in money changers,duty free shop owners,export and import business agents......the % is more when you compare with other religious people....So don't simply make any comments(May be its you own perspective about the religion.....Director's like shankar always do back round work before they do some characterization..
Post a Comment