பெண்கள் ஏன் நாட்டின் கண்கள்? ஏன் ஆண்கள் நாட்டின் கண்கள் கிடையாதா? ஒளவையார் கூறினார்
"வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும் ...."
ஏன் மக்களையோ அரசனையோ பற்றி பேசாமல் வரப்பை பற்றி கூறினார்? ஒரு பெரிய 10 மாடியோ 20 மாடியோ உள்ள கட்டடம் வலிமையாக இருக்க வேண்டுமானால் அதன் அடிதளம் வலிமையாகவும், கடினமாகவும் இட்டு இருக்க வேண்டும். அதைப் போல ஒரு நாடு வலிமை மிக்க ஒரு வல்லரசாக வேண்டுமாயின் அதன் வீடுகள் வலிமை மிக்கதாக இருக்க வேண்டும். ஒரு வீடு எவ்வாறு வலிமை மிக்கதாக இருக்கும்? அதன் அடிதளமான பெண்கள் நன்கு அறிவு பெற்று புத்திசாலிகளாக திகழும் போது!!
ஒரு வீட்டில் தந்தை எப்படி பட்டவராக இருந்தாலும் சரி தாய் சிறந்தவளாயின் வீடும் சிறந்து விளங்கும். எனவே தான் பெண்கள் நாட்டின் கண்கள். அதனால் தான் நாம் பெண்கள் தினம் கொண்டாடுகிறோம்.
செந்தில் அழகு.
Wednesday, March 7, 2007
பெண்கள் நாட்டின் கண்கள் !!
எழுதிய பறவை Senthil Alagu Perumal at 3/07/2007 08:35:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
really good points.........
expecting more...
Post a Comment